அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 14, 2017

குழந்தை இயேசு மன்றாட்டு மாலை

குழந்தை இயேசு மன்றாட்டு மாலை
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா,....
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டிரட்சித்த சுதனாகிய சர்வேசுரா,.....
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரா,....
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச். தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா,.....
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய பிதாவின் திருக்குமாரனாகிய திவ்விய பாலனே,....
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
கன்னிமரியாயின் குமாரனாகிய திவ்விய பாலனே,
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
மனிதானாய் அவதரித்த தேவ குமாரனாகிய திவ்விய பாலனே,....
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய தேவபிதாவின் ஞானமாயிருக்கிற திவ்விய பாலனே,...
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய மாதாவின் துப்புரவான திவ்விய பாலேனே,......
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய பரம பிதாவின் சாயலாயிருக்கிற திவ்விய பாலனே,...
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய மாதாவை சிருஷ்டித்தவராகிய திவ்விய பாலனே,....
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய பிதாவின் பிரகாசமாயிருக்கிற திவ்விய பாலனே,....
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய மாதாவின் மகிமையான திவ்விய பாலனே,....
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய தேவபிதாவுக்குச் சரிசமானமாயிருக்கிற திவ்விய பாலனே,...
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய மாதாவுக்குக் கீழ்படிந்தவரான திவ்விய பாலனே,.....
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய மாதாவுக்கு பொக்கிஷமாயிருக்கிற திவ்விய பாலனே,...
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய பிதாவின் வரமாயிருக்கிற திவ்விய பாலனே,.....
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய தாயின் காணிக்கையான திவ்விய பாலனே,......
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரீத்து சாந்துவினால் உற்பவித்த திவ்விய பாலனே,......
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உண்மையான மனிதனும் உண்மையான தேவனுமாயிருக்கிற திவ்விய பாலனே,...
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
பாவிகளான மனுமக்களை மீட்கப் பாவியின் வேஷங் கொண்ட திவ்விய பாலனே,....
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச். எலிசபெத்தமாளுடைய உதிரத்திலிருந்த ஸ்நாபக அருளப்பரைச் சுத்திகரித்த திவ்விய பாலனே,....
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச். கன்னிமரியம்மாளுதரத்தில் ஒன்பது மாதம் அடங்கியிருந்த திவ்விய பாலனே,...
 .....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
கன்னிமகிமை கெடாதவளின் கனியாகிய திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
மாட்டுக்கொட்டிலில் பிறந்து மாட்டு தொட்டிலில் கிடத்தப் பட்டுத் தரித்திரத் துணிகளால் சுற்றப்பட்ட திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
மனிதர் பாவங்களினிமித்தம் தொட்டிலில் அழுது கொண்டிருந்த திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
தாழ்மையில் மகிமையுள்ள திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
சற்பிரசாதத்தின் பொக்கிஷமான திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
பரிசுத்த சிநேகத்தின் ஊற்றான திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய பரிசுத்த மாதவினாலும் விரத்தரான சூசையப்பராலும் அத்தியந்த பக்தி வணக்கத்தோடே நமஸ்கரிக்கப் பட்ட திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
பிறந்தவுடனே சம்மனசுக்களால் அறிவிக்கவும் ஆராதிக்கவும் பட்ட திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
ஏழைகளான இடையர்களுக்கு உம்மை வெளிப்படுத்தின திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
சம்மனசுக்களுக்கும் மனிதர்களுக்கும் கர்த்தாவான திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
மனுஷசுபாவங் கொண்டதினால் எங்களுக்குச் சகோதரரான திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
பிதாவாகிய சர்வேசுரனையும் மனிதரையும் சமாதானப்படுத்தப் பிறந்த திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
தரித்திரராய்ப் பிறந்து உலக செல்வம் ஆடம்பர வெகுமானங்களை அகற்றின திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
துன்ப அந்தஸ்தில் பிறந்து இன்பங்களை வெறுத்த திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
விருத்தசேதனத்தில் எங்களுக்காக அன்போடு இரத்தத்தைச் சிந்தின திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
கிழக்கில் தோன்றின புதிய நட்சத்திரத்தால் உம்மை வெறிப்படுத்தினவரான திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
மூன்று ராஜாக்கள் உம்மை ஆராதிக்க வருவதற்காக அவர்களுக்குப் பக்தியையும் தைரியத்தையும் ஏவினவரான திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
மூன்று ராஜாக்கள் பொன் தூபவர்க்கம், வெள்ளைப் போளமாகிய மூவித காணிக்கைகளை ஒப்புக்கொடுத்து ஆராதித்த திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
பொன்னால் அரசனாகவும், தூபவர்க்கத்தால் தேவனாகவும், வெள்ளைப்போலத்தால் மனிதனாகவும் எண்பிக்கப்பட்ட திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய தாயாரால் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து மீட்டுக் கொள்ளப்பட்ட திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்மைத் தமது கரத்தில் ஏந்தின மகாத்துமாவாகிய சிமியோன் உள்ளத்தை சந்தோஷத்தால் நிரப்பின திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
தீர்க்கதரிசினியாகிய அன்னமாளேன்பவளால் புகழவும் இரட்சகரேன்று யூதர்களுக்கு அறிவிக்கவும் பட்ட திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
எரோதரனுடைய கொடிய பகைக்குத் தப்பித்துக் கொள்ள எகிப்து தேசத்துக்குக் கொண்டு போகப்பட்ட திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
எரோதனுடைய கொடுமையால் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு இரட்சண்ணியமாயிருந்த திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
எகிப்து தேசத்தில் பிரிவேசித்தபோதே பொய்த் தேவர்களுடைய விக்கிரங்களைத் தாழவிழுவித்து, நானாவித அற்புதங்களைச் செய்தருளின திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
எகிப்து தேசத்தில் ஏழு வருடம் பரதேசியாய்ச் சஞ்சரித்த் திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய தேவபிதாவின் திருவுளத்துக்கு அன்போடு கீழ் படிந்து எகிப்தினின்று நாசரேத்தூருக்கு வந்த திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
பரமபிதாவின் கட்டளைகளை ஆச்சரியத்துக்குரிய விதமாய் அனுசரித்த திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உம்முடைய தேவபிதாவின் தோத்திர ஊழியத்திற்காக உமது நேச மாதாவுக்கும், அர்ச். சூசைப்பைருக்கும் மறைவாய் ஜெருசலேமில் மூன்று நாள் தங்கின திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
எல்லாரும் ஆச்சரியப்படும்படி சாஸ்திரிகளுக்கு வேத சாத்தியங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிற போது மூன்றாம் நாள் அவர்கள் நடுவில் தேவாலயத்திலே தாய் தந்தையரால் காணப்பட்ட திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
தாய் தந்தையருக்குத் தாழ்ச்சியோடு கீழ்ப் படிந்திருந்த திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உலக ஜனங்கள் மிக்க ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
பாலர்களுக்கு மாதிரிகையாயிருக்கிற திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
சம்மனசுக்களுக்குத் தலைமையாயிருக்கிற திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
சகல அர்ச்சியஷ்டவர்களுக்கு முந்தின பாலனாயிருக்கிற திவ்விய பாலனே,
.....எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
தயாபரராயிருந்து ....................
.........எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.
தயாபராயிருந்து ..................
.........எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
ஆதாமென்பவனுடைய மக்களின் நிர்ப்பாக்கிய ஸ்துதியிநின்று...............
...............எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
பசாசின் அடிமைத்தனத்தினின்று,........
........எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
மோக அக்கினியினின்று,..........
........எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
ஆங்கார கெம்பீரத்தினின்று,.............
........எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
புத்திக் குருட்டாட்டத்தினின்று,...............
........எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
துர்மனதிலே நின்று,..........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
சகல பாவங்களின் நின்று,........... ............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய பரிசுத்த உற்பவத்தைப் பார்த்து, ,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.தேவரீருடைய தாழ்மையான பிறப்பைப் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
தேவரீர் சிந்தின கண்ணீர்களைப் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய வருத்தமான விருத்தசேதனத்தைப் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
தேவரீர் மூன்று ராஜாக்களுக்கு உம்மை வெளிப்படுத்தின கிருபையைப் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
தேவரீர் தேவலாயத்தில் காணிக்கையான பக்தி வணக்கத்தைப் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
தேவரீர் ஆச்சரியத்துக்குரிய கீழ்படிதலைப் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
தேவரீர் அனுபவித்த தரித்திரத்தைப் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
தேவரீர் பட்ட கஸ்திகளைப் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
தேவரீர் மனுமக்களுக்காக மரணமடைய விரும்பிய ஆவலைப் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
தேவரீர் இவ்வுலகில் செய்த பரிசுத்த சஞ்சாரத்தையும் சம்பாஷனைகளையும் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய பக்தி நிறைந்த செபத்தியானங்களைப் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
தேவரீர் பெரியோர்கள்மட்டில் காண்பித்த வணக்கத்தைப் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
உமக்குக் கைத்தாதையான சூசையப்பைரோடு தேவரீர் செய்த பிரயாச வேலைகளைப் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
தேவரீரின் திவ்விய பாலத்துவத்தைப் பார்த்து,...........
............எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய இயேசுவே...........
.............எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி,
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய இயேசுவே,............
........எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய இயேசுவே,............
................எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
திவ்விய பாலனாகிய இயேசுவே........
எங்களை இரட்சித்து ஆசீர்வதித்தருளும்.

செபிப்போமாக:-
 எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவே! தேவரீர் சிறு குழந்தையாய்ப் பிறந்து உமது தெய்வீகத்தையும் நீரெடுத்த மனுஷீகத்தையும் சிறுமையான ஸ்ததியில் தாழ்ந்து திருவுளமானீரே, உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது. உமது பாலத்துவத்தில் உமக்கு உண்டாயிருந்த திவ்விய ஞானத்தையும் பலவீனத்தில் வல்லமையையும் தாழ்ச்சியில் மகிமையையும் நாங்கள் அறிந்து இப்பூலோகத்தில் தாழ்ந்தப்பட்டவராகிய உம்மை ஆராதித்த பின்பு மோட்சத்திலே நீர் அடைந்திருக்கிற மகிமைப் பிரதாபத்தைத் தரிசிக்கவும் நித்திய பேரின்பத்தை அனுபவிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி.

ஆமென்.⁠⁠⁠⁠

8 comments:

  1. Amen praise the lord ,jesus is my saviour and sheperd, allailuaah amen, holy to the name of jesus

    ReplyDelete
  2. Thanks and I have a nifty give: How To Become A House Renovation small house remodel

    ReplyDelete
  3. 🙏jesus is my lord with his ❤️
    ever lasting love

    ReplyDelete
  4. Infant Jesus.bless our families.

    ReplyDelete
  5. Infant Jesus bless our families.

    ReplyDelete
  6. Arputha Kuzhandhai Yesuvae Have Mercy on us.

    ReplyDelete