அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

உண்மையான வழிபாடு

உண்மையான வழிபாடு

நம்முடைய வழிபாடு அவசரத் தேவையை கேட்பதற்காகவா ?

ஆராதிக்கும் வேளை மனம் சமாதானமடைகிறதா ?

நம்மோடு பேசும் இறைவன் குரலை விட நம் தேவையின் குரல் அதிகரிக்கிறதா?

நம் செபம் நேர்மறையான செயல்களுக்காக உள்ளதா ?

மனக் கலக்கத்துக்காக மனதை அமைதிப் படுத்திட மட்டுமே  அமைகிறதா ?

தோத்திரம் சொல்லும் உதட்டுடன் உள்ளமும் ஒன்றிக்கிறதா ?

செபத்தோடு வஞ்சனையும் பொறாமையும் கைக் கோர்க்கிறதா ?

அப்படியானால் நம்முடைய வேண்டுதல் எங்கே போகிறது ?

நம்முடைய செபம் வெறும் உலக ஆதாயத்தை குறித்தே அமைகிறதா ?

 நம் செபம் எப்படி அமைய வேண்டும்?

ஆவியிலும் உண்மையிலும் ஆத்மார்த்தமாக செபிப்போம்.

 அறிவிக்கப்படாத பாவங்களை அறிக்கையிட நல்ல பாவசங்கிர்த்தனம் பெற்று செபிப்போம்.

மனதில் கொலு வீற்றிருக்கும் தீய நாட்டங்களை வேரறுத்து பின் செபிப்போம்.

எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையோடு செபிப்போம்.

வெறும் குறுகிய கண்ணோட்ட செபமாயில்லாமல் தூய ஆவியின் துணைக் கேட்டு செபிப்போம்.

No comments:

Post a Comment