அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

அருட்சாதனங்களின் விளைநிலம் அன்னை மரியாள்

அருட்சாதனங்களின் விளைநிலம் அன்னை மரியாள்

அருளும் வளமும் சமச்சீராய் தந்து பராமரித்தாயே

அருளாத வரங்களில்லை அம்மா உன் திருக்கரத்தாலே

அருளோடு ஒவ்வொரு நாளும் எம்மை பாதுகாத்தாயே

அருளை வாரி வழங்கிடவே நீலக்கடலோரம் காத்திருந்தாயே

அருள் மகன் சொல்வதை நாளும் கேட்டிடவே பகர்ந்தாயே

அருள் தரும் சாதனங்களை யாம் பெற்றிடவே பரிந்துரைத்தாயே

அருளொன்றை பற்றிடும் பக்த சபையினர் நலம் காத்தாயே

அருளற்ற மாந்தரும் மனம் மாறுவர் அம்மா உம்மை பார்த்தாலே

அருளோ,நிறைவோ தாயே நீரின்றி எம்மிடம் தங்கிடாதே

அருள்வாய் வரமே நின் மலரடி நாடும் யாவர்க்கும்.

அருள்வாய் நலமே நின் பாதையில் நடக்கும் யாவர்க்கும்.

வாழ்க மரியே

No comments:

Post a Comment