புனித அன்னை தெரசா
வெள்ளை உடையில் ஒரு தேவதை
வெற்று மனங்களுக்கு ஒரு பூமழை
வெறுப்போரும் மனம் மாறும் ஒரு புன்னகை
வெற்றிக்கு வித்தான செபமாலை
வெப்பமோ குளிரோ கலங்கா நேர்நடை
வெளிநாட்டில் பிறந்து இந்தியராக இறந்த சரித்திரம்
கலங்கினோரை கண்டதும் குளமாகும் கண்கள்
தளர்வறியா பணியிலும் இறைவனைப் பற்றிடும் கரங்கள்
அழுக்கோ நாற்றமோ அதில் இறைவனைக் கண்ட பார்வை
வறியோரை உயர்த்தியே வரிகளாகிப் போன சுறுக்கங்கள்
வழியிலிருந்தோரை தூக்கியே வளைந்த முதுகு
வெற்றிப் பரிசையெல்லாம் வெற்றுடம்புகளுக்காய் தானம்
வெளிநாடோ நம்நாடோ என்றும் எளியோர் சிந்தனை
நற்கருணை நாதரிடம் என்றும் எப்பொழுதும் மாறா பற்று
புனித அன்னை தெரசாவே
புண்பட்டோரிடம் பரிவு காட்டவும்,
புண்ணான மனங்களுக்கு ஆறுதல் அளிக்கவும்,
புரையோடிய எங்கள் எண்ணங்களை மாற்றவும்
புதுப் பிறப்பாக நாங்கள்
மாறவும்
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

No comments:
Post a Comment