அன்னையின் தேரும் - நம் மனத் தேரும்
அம்மா உம் தேர் அழகோ அழகு
அது போலவே உம் கரத்தால் எம் மனதை அழகாக்குங்க அம்மா
எழில் அம்சமாய் உம் கோலம் பேரழகு
எம் வாழ்வின் கோலமும் ஒழுங்குத் தேராய் மாற்றித் தாருமம்மா
அத்தனை பூக்களும் கொள்ளை அழகு
அன்பு பூக்களாலும் பாசப் பூக்களாலும் எம் மனதையும் நிறைத்திடுங்க அம்மா
அலங்காரம் கண்களை விட்டகலா அழகு
அகங்காரமும்,கர்வமும் எம்மை விட்டகல வைத்திடுங்க அம்மா
அணைந்தும் அணையா விளக்குத் தோரணம் விண்ணழகு
அறிந்தும்,அறியாமலும் சேர்த்த எம் பாவத்தை நீக்க உதவிடுங்க அம்மா
அசைந்தாடி நீர் வரும்போது தெய்வீக அழகு
நிலையற்ற எம் மனதை உம் மகன் மேல் ஒருநிலைப்படுத்துங்க அம்மா
அம்மா உங்க தேர் கூட நடக்கிறோம்
எம் மனத்தேரை மாசின்றி நடக்க வைங்க அம்மா
அம்மா உங்க தேரை பார்த்து மெய் சிலிர்த்தோம்
எங்க மனமும் மெய்யை உணர்ந்து நன்மை புரிய செய்திடுங்க அம்மா
அம்மா உங்க தேரில் எமை மறந்தோம்
மறவாமல் பிறர் நலன் காண கூடவே இருங்க அம்மா

No comments:
Post a Comment