அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

எம் மரமே,மன மாற்றமே

எம் மரமே,மன மாற்றமே

ஓ சிலுவை மரமே !
கலக்கங்களும் ஏமாற்றங்களும் இணைந்து தத்தளிக்க எம் கரை சேர் கட்டுமரமானாய்...

ஓ சிலுவை மரமே !
பாவமும் பாவ நாட்டமும் தாழ்த்தாமல் எமை உயர்த்திடும் ஏணியானாய்....

ஓ சிலுவை மரமே !
அன்பாலும் கருணையாலும் எமைப் பாதுகாக்கும் மேல்வரிச் சட்டமானாய்....

ஓ சிலுவை மரமே !
மகிமையாக மனங்களை மாற்றிய மரத்தேரானாய்...

ஓ சிலுவை மரமே !
ஞானக் கண்ணிழந்தோர் வழிதேட உதவும் ஊன்றுகோலானாய்..

 ஓ சிலுவை மரமே !
மனமாறி பிறர் மனம் மாற நல்வழி செல்ல மரப்பாலமானாய்....

சிலுவை மரமே
உன் மகிமையை நினைப்போம் தினமே!!

சிலுவை மரமே
உன்னை முன்னிருத்தி
வாழ்வோம் நலமே!!

No comments:

Post a Comment