அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

இயற்கை ஆர்வலரே .....அசிசியாரே....

இயற்கை ஆர்வலரே .....அசிசியாரே....

அன்பினால் உலகை ஆளவே
படைத்த இறைவன் பகர்ந்தாரே

அவ்வாக்கையே சிரமேற் கொண்டு வாழ்ந்த புனிதரே

வாயில்லா உயிரும் இறைவன் படைப்பெனவே உளங்கனிந்த கனிவானவரே

பறவையின் பார்வையில் படைத்தவனைக் கண்ட மேன்மையானவரே

ஆட்டுக் குட்டியின் ஆனந்த நடையில் ஆண்டவரைப் புகழ்ந்த மென்மையானவரே

இயற்கை அழகில் உயிரோவியமாம் கடவுளின் கைத்திறனை ரசித்த கலைஞரே

பகையுள்ள இடத்தில் பாசத்தை நுழைத்த இனிமையானவரே

இருள் சூழும் உலகில் ஒளியேற்றிட உழைத்த உழைப்பாளியே

இயற்கைச் சூழலில் பாலன் பிறப்பை முதன்முதலாக கொண்டாடியவரே

எளிமை என்றும் வலிமை என சபதமேற்றவரே

உம்மைப் போலவே நாங்களும் இயற்கையை நேசிக்கவும்,

 * இயற்கையை பாதுகாக்கவும்

 *இயற்கையை
காப்பாற்றவும்,*

இயற்கையை
வளப்படுத்தவும்
துணை செய்யுமே...

No comments:

Post a Comment