கடவுள் மீதான நமது நம்பிக்கை
மத்தேயு 20: 1-16 நற்செய்தி வாசகம் கடவுளின் அன்பிற்கும், இரக்கத்திற்கும் எடுத்துக்காட்டான ஒரு பகுதியாக இருக்கிறது. இரண்டு வகையான வேலையாட்களை நாம் பார்க்கிறோம். முதல் வகையான வேலையாட்கள், தலைவரோடு ஒப்பந்தம் போடுகிறார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்று கூலி கிடைக்கும் என்பதால், அவர்கள் வேலைக்கு ஒத்துக்கொள்கிறார்கள். அவர்களின் எண்ணம் வேலையின் மீது அல்ல, தாங்கள் வாங்கக்கூடிய கூலியின் மீது இருக்கிறது.
இரண்டாவது வகையான வேலையாட்கள், தலைவரோடு ஒப்பந்தம் எதையும் போடவில்லை. தங்களுக்கு இவ்வளவு கூலி வேண்டும் என்று, அவர்கள் அவரிடத்தில் முறையிடவும் இல்லை. தாங்கள் செய்யப்போகும் வேலைக்கு எவ்வளவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இல்லை. நாம் வேலையைச் செய்வோம், கூலியை தலைவரே முடிவு செய்யட்டும், என்று வேலையில் கவனம் செலுத்துகிறார்கள். கடவுளின் பணியைச் செய்கிறபோது, இத்தகைய மனநிலையோடு நாம் பணி செய்ய வேண்டும். பேதுருவைப்போல, எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்தொடர்ந்தோமே? எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்று எதிர்பார்க்கக் கூடாது. நமக்கான கூலியை கடவுள் நிச்சயம் தருவார்.
கடவுளின் பணியைச் செய்கிற பணியாளர்கள் நடுவில், கடவுளைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடு இருக்க வேண்டும். அத்தகைய மதிப்பீடு நம் உள்ளத்தில் இருக்கிறபோதுதான், நமது பணி உன்னதமான, புனிதமான பணியாக இருக்கும். இல்லையென்றால், முதல் வகையான பணியாளர்களைப் போலத்தான் நமது பணி இருக்கும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:
Post a Comment