மனமார மன்னிக்காவிட்டால்...
மன்னிப்பைப் பற்றி மிகவும் வலிமையாகப் பேசியுள்ளார் இயேசு. இன்றைய நற்செய்தி வாசகம் அத்தகைய வலிமையான பகுதிகளுள் ஒன்று.
உடன் பணியாளரை மன்னிக்காத கடனாளி ஒருவரைப் பற்றிய உவமையை இயேசு படைப்பாற்றலோடு விவரித்திருக்கின்றார். இக்கதையைக் கேட்ட அனைவருமே அந்தப் பணியாளின்மீது ஆத்திரம் கொண்டிருப்பர். அதுதான் இந்த உவமையின் வலிமை. ஆனால், நாமே அந்தப் பணியாள் என்பதை உணரும்போது இன்னும் அதிக வலிமையோடு இந்த உவமை நம்மைத் தாக்குவதை அறியலாம்.
நமது பாவங்கள் அனைத்தையும் எந்த நிபந்தனையுமின்றி இறைவன் மன்னிக்க முன் வரும்போது, பிறரின் குறைகளை, குற்றங்களை நாம் ஏன் மனதில் வைத்திருக்க வேண்டும்?
அவற்றை மன்னிக்க முன் வருவோம். அத்துடன், "மனமார மன்னிக்காவிட்டால்" என்னும் இயேசுவின் அழுத்தச் சொற்களை நினைவுகூர்ந்து, முழு மனத்துடன், அதாவது, எந்தத் தயக்கமும், நிபந்தனையுமின்றி பிறரை மன்னிக்க முன்வருவோம். அவர்களுக்காக இறைவனிடம் பரிந்துபேசுவோம்.
மன்றாடுவோம்: இறைவனின் அன்பின் அடையாளமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இறைத் தந்தையின் முழு அன்பையும், இரக்கத்தையும் அவரது மன்னிப்பின் வழியாகப் பெற்றுத் தந்தீரே. உமக்கு நன்றி. நாங்கள் பிறரை மனமார மன்னிக்கும் அருளைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
- பணி குமார்ராஜா

No comments:
Post a Comment