அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, September 1, 2017

முன்மதி உள்ளவர்களாய் வாழ்வோம்.

முன்மதி உள்ளவர்களாய் வாழ்வோம்.

Fr Palay Mariaantony, Palayamkottai.

ஒரு பெரிய வணிகன் ஒருவன் ஒருநாள் தன்னுடைய வியாபாரத்தை எல்லாம் முடித்துவிட்டு இரவு நேரத்தில், தனியாக, அடர்ந்த காடு வழியாக வந்துகொண்டிருந்தான். அது திருடர்கள் நடமாடக்கூடிய காடு.

அப்போது திடிரென்று ஒரு திருடன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு வணிகனுக்கு முன்பாகத் தோன்றி, பணப்பையில் வைத்திருக்கூடிய பணத்தை எல்லாம் எடுக்குமாறு மிரட்டினான். வணிகன் சிறுதும் பதற்றமே அடையாமல் திருடனிடம், “சரி, நான் என்னிடம் இருக்கக்கூடிய பணத்தை எல்லாம் உனக்குத் தருகிறேன். ஆனால் என்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய என் மனைவி நான் திருடனிடத்தில்தான் எல்லாப் பணத்தையும் இழந்தேன் என நம்பும் பொருட்டு இந்தப் பணப்பையில் துப்பாக்கியால் ஒரு சுடு சுடு என்றான். திருடன் மனதிற்குள் ‘இவன் இவ்வளவு நல்லவனாக இருக்கிறானே’ என்று சொல்லிக்கொண்டு பணப்பையில் ஒரு சுடு சுட்டான்.
பின்னர் வணிகன் திருடனைப் பார்த்து, “என்னுடைய மனைவி இந்தப் பணப்பையில் இருக்கக்கூடிய - துப்பாக்கியினால் ஏற்பட்ட - துளையைப் பார்த்து எல்லாம் நம்ப மாட்டாள். ஆகவே என்னுடைய சட்டையைக் கழற்றித் தருகிறேன் அதிலும் சுடுங்கள் என்றான். திருடனும் அவ்வாறே செய்தான். ஆனால் வணிகனோ, “இது போதாது. இன்னும் சுடுங்கள்” என்றான். உடனே திருடன், “எத்தனை முறைதான் சுடுவது. துப்பாக்கியில் இருந்த எல்லாத் தோட்டாக்களும் காலியாகிவிட்டன” என்றான்.

இதைக் கேட்டு சுதாரித்துக் கொண்ட வணிகன் திருடனிடமிருந்து பணப்பையைப் பிடுங்கினான். திருடன் திமிரவே, வணிகன் அவனிடம், “உன்னைவிட நான் மிகவும் பலசாலி. சண்டை போட்டு பார்ப்போமா?” என்றான். திருடன் தான் கடுமையாக ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தான். வணிகன் அப்படியே பணப்பையோடு வீட்டுக்கு போனான்.
அறிவோடும், முன்மதியோடும் செயல்பட்டால் எப்படிப்பட்ட பிரச்சனையையும் எளிதாய் அணுகலாம் என்பதை இக்கதை மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து முன்மதியோடு செயல்பட வேண்டும் என்பதை அழகாக வலியுறுத்துகிறார். விண்ணரசை பல்வேறு உவமைகள் குறிப்பாக கடுகுவிதை உவமை, வலை உவமை, திருமண விருந்து உவமை வாயிலாக விளக்கிய இயேசு இன்றைய நற்செய்தியில் பத்துத் தோழியர்கள் உவமை வழியாக விளக்குகிறார். பத்துக் கன்னியர்களில் முன்தயாரிப்போடும், அறிவுத் தெளிவோடும், முன்மதியோடும் செயல்பட்ட ஐந்து கன்னியர்கள் மட்டுமே மணமகனைக் காணும் பேறு பெறுகிறார்கள். ஆனால் அறிவிலிகளோ அவ் வாய்ப்பினை இழந்து விடுகிறார்கள்.

ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பணிக்கென அனுப்புகிறபோதுகூட ,”ஓநாய்களிடையே ஆடுகளைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்பைப்போல முன்மதியுடையவர்களாக இருங்கள்” என்கிறார் (மத் 10:16). வஞ்சகமும், பொய்யும் நிறைந்த இவ்வுலகில் இயேசுவின் சீடர்களாய் இருக்கவேண்டும் என்றால் முன்முதி என்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது.

ஆகவே முன்மதி உள்ள மக்களாய் இருந்து, இயேசுவுக்கு சான்று பகர்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.

No comments:

Post a Comment