அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, December 20, 2017

சொல்லிக் கொடுப்போம் . . . .

 சொல்லிக் கொடுப்போம் . . . .

பிறந்த மழலையின் காதுகளில்
நம இறைப் பாடல்கள் கேட்க வைப்போம்

காலை மாலை நேரங்களில் குழந்தையின் அருகமர்ந்து திருப்பாடல்கள் தினம் படிப்போம்

ஆலயம் தூக்கி வரும் சமயங்களில் கருத்தாய்
இறைவன் உறைவிடம் நோக்கி காட்டுவோம்

நொறுக்குதீனி அத்தனையும் ஆலயத்தில்
அளிப்பதை தவிர்ப்போம்

தவழும் நாட்களில் ஆலயத்தின் உள்ளமர்ந்து
உன்னத இறைவனோடு உரையாடுவோம்

நடக்கும் வயதில் நாமும் திவ்ய நற்கருணை நாதருக்கு முழு மரியாதை செய்து காட்டுவோம்

படிக்கும் பருவத்தில் கவனமுடன்
மறைக்கல்வி பயில கருத்தாய் அனுப்புவோம்

கேள்வி கேட்கும் காலத்திலே விவிலியக் கதைகள் ஒவ்வொன்றாய் விளக்கி சொல்வோம்

ஒவ்வொரு நாளும் இறை சன்னதியில்
அமர்ந்து செபிக்க நேரம் ஒதுக்குவோம்

வீண்பிடிவாதம் பிடித்தழும் பிள்ளைகளுடன்
சமரசம் செய்து இறைவன் இரக்கம் உரைப்போம்

தனக்குரியதை பிறருக்கு பகிர
செயல்வழி செய்து காட்டுவோம்

அதிகாலையில் விழிக்க சொல்வோம்,
அருமை இயேசுவை துதிக்க சொல்வோம்

அக்கறையாய் படிக்க சொல்வோம்,அத்துடன்
அன்பாய் வாழ சொல்வோம்

ஊக்கத்துடன் இருக்க சொல்வோம், ஊருக்கும் உதவ சொல்வோம்

கண்ணியமாய் வாழ சொல்வோம்,
கவனிப்பில்லாதோரை காண சொல்வோம்

படிப்பில் முதன்மையாய வர சொல்வோம், பரிதவிப்போரையும்  நேசிக்க சொல்வோம்

சுத்தமாக இருக்க சொல்வோம்,             
சுற்றுசூழலை பாதுகாக்க சொல்வோம்

ஆக்கங்கள் பல காண சொல்வோம்,
ஆண்டவருக்கு நன்றி கூற சொல்வோம்

ஜெயிப்பது எப்படி என சொல்லிக்கொடுப்போம்,
ஜெபமாலையின் மகிமையை பகர்ந்திடுவோம்

தினமும் பள்ளிக்கு நேரத்தோடு அனுப்புவோம் அவ்வண்ணமே
திருப்பலிக்கும் சீக்கிரம் போக பயிற்றுவிப்போம்

கை வேலை ஒன்றை பழக்கிடுவோம்,
கைபேசி பயன்பாட்டை குறைக்க சொல்வோம்

விவரமாய் வாழ சொல்வோம்,கண்டிப்பாய்
விவிலியம் வாசிக்க சொல்வோம்

இனியவையாக என்றும் பேசுவோம்,
இரவில் இறை நன்றியோடு படுக்க பழக்குவோம்

அன்புடன்,

கஸ்மீர் ரோச், சின்னமலை,9

No comments:

Post a Comment