அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, December 20, 2017

சகோதரமே.. சகோதரமே....

 சகோதரமே.. சகோதரமே....

வாழ்வில் வளம் தந்த சகோதரமே
அன்பை ஊட்டிய அருமை சகோதரமே

களிப்புடன் உண்டு உறங்கிய சகோதரமே
கவனமுடன் கண்காணித்த சகோதரமே

இனிக்க இனிக்க உரையாடிய சகோதரமே
இல்லத்தில் மகிழ்வை பகிர்ந்த சகோதரமே

துன்ப துயரங்களில் ஆறுதலான சகோதரமே
துணையாக நண்பனாக அருகிருந்த சகோதரமே

பாசத்தை நேசத்தை பார்த்து பார்த்து பரிசளித்த சகோதரமே
பார்க்க பார்க்க உருகிய ஒப்பில்லா சகோதரமே

தனிமையில் தைரியமளித்த இனிய சகோதரமே
தவிப்பிலும் கொண்டாட்டத்திலும் பங்கேற்ற சகோதரமே

இறைவனிடம் எனக்காக மன்றாடும் சகோதரமே
இத்தரணி உள்ளளவும் மறவோம் சகோதரமே

பெற்றோர் எனக்களித்த பாசப்பறவையே
பெற்ற நன்மைக்கெல்லாம் நன்றி பகர்வோம் சகோதரமே

பிறந்தது முதல் ஒளிர் விளக்காய் வலம் வந்த சகோதரமே
பிழை ஏதும் செய்தாலும் மன்னித்து ஏற்ற சகோதரமே

ஐயங்கள் தோல்விகள் கண்டால் ஆறுதல் தந்த சகோதரமே
ஐம்பெரும்காப்பியமாய் ஒன்றித்து வாழ்ந்த சகோதரமே

சகோதரத்துவத்தை போற்றுவோம்.

சகோதரத்துவத்தை வாழவைப்போம்.

சகோதரத்துவத்தை மகிழ்விப்போம்.

கஸ்மீர் ரோச், சின்னமலை, 9382709007

No comments:

Post a Comment