கிறிஸ்தவா்கள் மற்றவா்களுக்கு நற்கருணையின் மூலம் ஓா் ஆசீராக முடியும்
கிறிஸ்தவா்கள் மற்றவா்களுக்கு ஓா் ஆசீராக முடியும்
எல்லையற்ற ஆற்றலைக் கொண்டுள்ள இறைவன் தன்னை ஒரு சிறு ரொட்டித் துண்டுக்குள் அடக்கி வைத்திருப்பது அவரது அன்பின் வெளிப்பாடு.
மிகச்சிறியவற்றைக் கொண்டு மிகப்பெரும் விடயங்களை இயேசுவின் அன்பு சாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக தூய நற்கருணை உள்ளது.
பிறருக்கு உதவிச் செய்ய மறுத்து தனக்குள்ளேயே சுயநலவாதியாக வாழ்வதற்கு எதிரான மருந்தாக தூய நற்கருணை உள்ளது எனவும் ரொட்டியை பிட்டு பிறருடன் பகிரும் செயல், நாமும் பிறருக்கு நம்மையே வழங்கவேண்டும் என்பதை பிரதிபலிக்கிறது.
அன்பு மற்றும் அக்கறைக்காக மக்கள் பசியாய் இருத்தல், முதியோர் தனிமையில் வாழ்தல், வறுமையில் குடும்பங்கள் சிரமங்களைச் சந்தித்தல் போன்ற சூழல்களில் இயேசு நம்மை நோக்கி "அவா்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்' என்று கேட்கிறாா்.
திருப்பலியின் வழியாக ஆசீரைப் பெறும் கிறிஸ்தவா்கள் தாங்களும் மற்றவா்களுக்கு ஓா் ஆசீராக மாறமுடியும்.
திருத்தந்தை பிரான்சிஸ் 27 ஜூன் 2019
No comments:
Post a Comment