#நற்கருணையின் வல்லமை#
பரிசுத்த பீடத்தில் பலியிடப்பட்ட வாழ்வு தரும் பலி பொருள் தான் இந்த நற்கருணை .
இதை நற்செய்திகளில் இயேசு நாதர் தெளிவாக கூறியுள்ளார்.
லூக்22:19 "இதை வாங்கி உண்ணுங்கள் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல் இதை என் நினைவாக செய்யுங்கள்" என்றார் .
"இக்கிண்ணம் உங்களுக்காக சிந்தப்படும் என் இரத்தத்தினால் ஆகும் புதிய உடன் படிக்கை" லூக்22:20
இந்த இரண்டு வசனகங்களை மீண்டும் மீண்டும் தியானித்து பாருங்கள்.
19 வது வசனத்தில் இயேசு நாதர் கூறியது இது "உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்"
நமக்காக நம்மில் அன்புகூர்ந்து தம் சரிரத்தை நம் பாவாங்களுக்காகவும் மறைவான சில பாவங்களுக்காகவும் அதற்காக பரிகாரமாகவும் தன்னையே ஒப்புக் கொடுக்கிறார்.
பாவத்தினாலே நாம் மரித்தவர்களாயிருக்கிறோம். ஆம் நாம் பாவத்தினாலே பரிசுத்த தேவனுடைய சமூகத்திலே நிற்பதற்கு தகுயற்றவர்களாக இருக்கிறோம். அதனால் மரித்தவர்களாக இருக்கிறோம்.
நாம் மீண்டும் உயிர் பெற்று தள்ளப்பட்ட தேவசமூகத்திலே நிற்பதற்காக பலியாக கொடுக்கப்பட்ட பலி பொருள்தான் கிறிஸ்துவின் சரீரம்.
இதை அருளப்பர் நற்செய்தி 6:51ல் வாசிக்க முடியும் "நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு இதை எவனாவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காக பலியாகும் என் தசையே"
மேலும் 53 வசனத்திலே உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். மனுமகனின் தசையை தின்று அவர் இரத்தத்தை குடித்தாலொழிய உங்களுக்குள் உயிர் வராது.
நாம் கிறிஸ்துவின் சரீரத்தை உட்கொண்டால் மட்டுமே உயிர் வாழ முடியும். அருளப்பர் நற்செய்தி 6வது அதிகாரம் முழுவதும் நற்கருணை பற்றி தெளிவாக இயேசு ஆண்டவர் சொல்லி இருக்கிறார்.
ஆகவே கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும் பெறுவதற்கு பாத்திரவான்களாகும் படிக்கு நமது உடலையும் ஆன்மாவையும் பரிசுத்தப்படுத்தும்படி ஒப்புக்கொடுப்போம்......
கத்தோலிக்க திருச்சபையின் அருட்சாதனங்கள் வெறும் சடங்கு முறை அல்ல நம்மை கிறிஸ்துவின் இராண்டாம் வருகைக்கும் தயார்படுத்தி விழித்து செபிக்கத் தூண்டும் வழிமுறைகள். ஆமென்.
செபம்:
அன்பு இயேசுவே நாங்கள் உம் சரீரத்தை புசிக்கவும், உம் இரத்தத்தை பானம் பண்ணவும், உம் சமூகத்தில் நிற்பதற்கும் பாத்திரவான்களாக மாற்றும் ஆண்டவரே. ஆமென்.
உண்மை சம்பவம்.....!!!
சுமாா்,12,வருடங்களுக்கு முன்னதாக நான் கன்னியாகுமரியில் உள்ள அருள்வாழ்வு தியான இல்லத்தில் நடைபெற்ற தியானத்தில்
கலந்துகொண்டேன்....
தியானத்தில் மனஅமைதியும் மகிழ்ச்சியும் நிரம்பி இருந்தது.... அந்தநாட்கள் மிகவும் சந்தோசமாய் இருந்தது.
தியானத்தின் இறுதி நாளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டடது அதனைத் தொடர்ந்து..... நன்றிபரிமாருதல் நிகழ்வும் நடைபெற்றது....
இந்தவேளையில் ஒருசகோதரன் பலத்தகுரல் எழுப்பியும், கரணங்கள் அடித்தும்...உடலை வழைத்தும் மிகவும் ஆக்ரோசமாக நடந்து கொண்டதைப்பார்த்து... எல்லோரும் வியந்தும் ஆச்சரியத்திலும் உரைந்து போயினோம்......
ஊழியம் செய்பவர்கள் வந்து சகோதரனுக்காக ஜெபம் செய்தனா்.(கேப்டன் சிலுவை அவா்களும்) தாகத்தோடு ஜெபம் செய்தாா். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை.....
இந்த சகோதரனுக்காக எடுத்த முயற்சிகள்... எதுவும் பயன் தரவில்லை.... என்னசெய்வதென்று குளம்பி இருந்த சூழலில்.......... நற்கருணை பேழையை எடுத்து வந்து Blessing பண்ண முடிவு செய்யப்பட்டு குருக்கள் இல்லாததால்.... அருட்சகோதரி அவா்களிடம்
ஒப்படைக்கப்பட்டது....
அருட்சகோதரி அவா்கள் சிரம்தாழ்த்தி முழந்தாழ்படியிட்டு....ஜெபம் செய்து அப்பவடிவில் இருக்கும் இயேசுவோடு அங்கு வந்து சகோதரனைப் பார்த்து ஜெபம் செய்தபோது.......
அந்தசகோதரனைப் பிடித்திருந்த தீயஆவி அலரிஅடித்துக் கொண்டு சகோதரனைவிட்டு வெளியேரியது. சகோதரன் பழைய நிலைமைக்கு திரும்பினாா்......
அப்பதான் புரிந்தது நற்கருணையின் வல்லமை.... எல்லோரையும் மெய்சிலிர்க்கச் செய்தது.....
நற்கருணையை சாதாரணமாகப் பார்த்தால் அது கோதுமையால்
செய்யப்பட்ட அப்பத்துண்டு தான்.
விசுவாசத்தோடு நாம் பாா்க்கும் போது...இயேசுவின் பிரசன்னம்
நம்மோடு இருப்பதை... உணரமுடியும்....
கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்திருப்போம்... இறைஆசீா் பெற்று மகிழ்வோம்.
இயேசுவுக்கே புகழ்!மரியே வாழ்க!
No comments:
Post a Comment