அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, January 2, 2018

இறைவனின் தாயே

இறைவனின் தாயே

இணையில்லா தாயே

இத்தரணியின் தாயே

இல்லத்தில் அமர்ந்தாயே

இவ்வருடத்தை தந்தாயே

இளையோரின் அன்புத்தாயே

இயங்கிட அருள்செய் தாயே

இறைஉறவின் தாயே

இன்னலில் அடைக்கலத்தாயே

இமைமூடாமல் காத்தாயே

இத்தரணியில் வந்து மகிழ்ந்தாயே

இறைவார்த்தையை ஏற்ற தாயே

இந்தியாவின் இனிய தாயே

இதோ உன் தாய் என்றதும்

இம் மானிடரை அணைத்தாயே

இம் மட்டும் எமை வாழ்வித்தாயே

இன்றுமென்றும் எம் தாயே - விண்

இருப்பிடம் எமக்கு தயாரித்தாயே

இப்பூமியில் வரமளித்தாயே

இயங்க வைத்து வளமளித்தாயே

இங்கு மறுப்போரை மன்னித்தாயே

இதயத்தில் இதமளித்தாயே

இழந்த உறவுகளை சேர்த்தாயே

இழையோடிடும் இனிமை தந்தாயே

இனிமையே !

இடைவிடா சகாயமே !

வாழ்க மரியாயே !!!

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை

No comments:

Post a Comment