சிலுவையே மகிமையே...
சிலுவை மனபாரபளுவை குறைத்திடும்
சிலுவை உள்ள வலுவை சீராக்கிடும்
சிலுவை ஒற்றுமையை ஒளிர்விக்கும்
சிலுவை மனதை உறுதிப்படுத்திடும்
சிலுவை பயத்தை போக்கிடும்
சிலுவை சுயமதை வெறுத்திடும்
சிலுவை பாவத்தை வேரறுத்திடும்
சிலுவை நியாயத்தை நிலைநிறுத்திடும்
சிலுவை ஐயத்தை களைந்திடும்
சிலுவை ஒற்றுமையை வலுவாக்கும்
சிலுவை வஞ்சகத்தை தவிர்த்திடும்
சிலுவை சினத்தை மன்னித்திடும்
சிலுவை கடினத்தை இலகுவாக்கிடும்
சிலுவை ஏமாற்றத்தை வெற்றியாக்கிடும்
சிலுவை துன்பத்தை இனிமையாக்கிடும்
சிலுவையின் மகிமையை நாளும் பெற்றிட நம்மையே கையளிப்போம்.
சிலுவையின் மகிமை பெருவிழா நல்வாழ்த்துகள்
அன்புடன்,
கஸ்மீர் ரோச்,
No comments:
Post a Comment