அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, July 29, 2024

திருத்தந்தை புனித முதலாம் யோவான்

 திருத்தந்தை புனித முதலாம் யோவான் 

புனித முதலாம் யோவான்
ஆட்சி துவக்கம்523
ஆட்சி முடிவு526
முன்னிருந்தவர்ஹோர்மிஸ்டாஸ்
பின்வந்தவர்நான்காம் ஃபெலிக்ஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு470
துஸ்கானி
இறப்புமே 18, 526
இரவேனா, ஓஸ்த்ரோகாதிக் பேரரசு
கல்லறைபுனித பேதுரு பேராலயம்
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாமே 18
ஏற்கும் சபைகத்தோலிக்கம், கிழக்கு மரபு

வாழ்க்கை வரலாறு

யோவான், தஸ்கனி என்னும் இடத்தில் பிறந்தார். இவர் வளர்ந்து இளைஞனானபோது திருத்தந்தை சிமாக்கூஸ் என்பவரிடத்தில் முதன்மைத் திருத்தொண்டராக பணி செய்து வந்தார். 523 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஹார்மித்தாஸ் என்பவர் இறந்தபிறகு, திருத்தந்தைக்கான போட்டி நடைபெற்றது. அதில் யோவான் ஏகமனதாக திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யோவான் திருத்தந்தையாக உயர்ந்த பிறகு சந்தித்த முதல் சவால் ஆரியபதம் என்ற தப்பறைக் கொள்கைதான். இது இயேசுவின் இறைத்தன்மையை மறுத்து வந்தது. ‘தந்தைக் கடவுளும் இயேசுவும் ஒரே இயல்பை அல்ல, ஒத்த இயல்பைக் கொண்டிருக்கிறார்கள்” என்று இந்தத் தப்பறை கொள்கை சொல்லி வந்தது. இதனை கொன்ஸ்டண்டிநோபிளில் ஆயராக இருந்த ஜஸ்டின் என்பவர் மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார். இதைக் கேள்விப்பட்ட இத்தாலியில் அரசராக இருந்த தியோடரிக் என்ற மன்னன், திருத்தந்தையைக் கூப்பிட்டு, ஜஸ்டின் ஆரிய பதத்தைப் பின்பற்றுவோரை ஒடுக்குவதை நிறுத்தச் சொன்னார். திருத்தந்தை யோவானும் அரசன் சொன்னதைக் கேட்டு, கொன்ஸ்டண்டிநோபிளில் இருந்த ஜஸ்டினைச் சந்தித்து மன்னன் சொன்னதைச் சொன்னார். இதனால் ஆயர் ஜஸ்டின் ஆரியபதத்தைப் பின்பற்றுவோரை ஒடுக்குவதை ஓரளவுக்கு நிறுத்திக் கொண்டார்.

பிரச்சனையை ஓரளவுக்கு முடித்துவிட்டு, திருத்தந்தை யோவான் உரோமை நகருக்கு வந்தபோது, மன்னன் தியோடரிக்கோ திருத்தந்தை அவர்களும் ஆயர் ஜஸ்டினும் தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள் எனத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை சிறையில் அடைத்து பலவாறாகச் சித்ரவதை செய்தான். அத்தகைய தருணங்களில் திருத்தந்தை அவர்கள் மனந்தளராமல், அதே நேரத்தில் அவன் சொன்னதைக் கேட்டு நடக்காமல், இறைவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து வாழ்ந்து வந்தார். இதனால் அவர் 526 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய முதலாம் யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறைவனுக்குக் மட்டுமே கீழ்ப்படிந்து நடத்தல்

தூய முதலாம் யோவானின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பாரக்கும்போது அவர் அரசனுக்கு அல்ல, இறைவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடந்தார் என்பதை அறிந்துகொள்ளலாம். அரசன் அவரை எவ்வளவோ தனக்கு இணங்க வைக்க முயன்றபோதும் அவர் ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடந்தது நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. தூய முதலாம் யோவானின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள்வேண்டி விளம்பரம் செயதிருந்தார். விளம்பரத்தை பார்த்துவிட்டு இளைஞர்கள் பலர் வந்தனர். இரண்டு நாட்கள் அவர் சொன்ன வேலையை செய்தனர். மறுநாளோ ஆட்கள் வருவதை நிறுத்தி கொண்டனர். இறுதியில் ஒரு வாலிபன் மட்டும் வேலைக்கு வந்தான் அவனிடம் அந்த செல்வந்தர் அங்கு கிடந்த ஜல்லிக்கற்களை எடுத்து சற்று தொலைவில் போய் கொட்ட சொன்னார். மறுநாள் அதை அள்ளி ஏற்கனவே இருந்த இடத்திற்கு வந்து போட சொன்னார். அவ்வாறு ஒரு வாரம் முழுவதும் நடைபெற்றது. ஞாயிறு உனக்கு விடுமுறை என்றார். ஒரு வாரத்திற்கான கூலியையும் கையில் கொடுத்தார்.

திங்கட்கிழமை அவர் சற்றும் அந்த வாலிபனை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாலிபனோ திங்கட்கிழமை காலை, சொன்ன நேரத்திற்கு வேலைக்கு வந்து நின்றான். ஏன் எதற்கு என்று எந்த கேள்வியுமின்றி எஜமானின் கட்டளைக்கு அப்படியே உண்மையாய் கீழ்ப்படிந்த வாலிபனுக்கு அவன் படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற உயர்ந்த வேலையை கொடுத்தார். பல இலட்ச ரூபாய் கணக்கு வழக்குகளை பார்க்கவும், முக்கியமான பொறுப்புகளை அவனிடம் கொடுத்து இரகசியம் காக்கவும அவனை நியமித்தார். அதனால் அவன் உயிருள்ள வரை அவருடைய குடும்பத்தாருக்கு மெய்காப்பாளானாக இருந்தான்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் வாலிபன் தன் எஜமானன் என்ன சொன்னாரோ அதற்கு அப்படியே கீழ்படிந்து நடந்தான். அதனால் அவன் தன் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைந்தான். நாமும் இறைவனுக்கு எப்போதும் கீழ்படிந்து நடக்கின்றபோது வாழ்வில் உயர்வது உறுதி.

ஆகவே, தூய முதலாம் யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, இறைவனுக்கு மட்டும் கீழ்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

புனித ஹோர்மிஸ்தாஸ்

 புனித ஹோர்மிஸ்தாஸ் Pope Saint Hormisdas

பிறப்பு : C 450, 
ஃப்ரோஸினான்(Frosinone), இத்தாலி

இறப்பு : 6 ஆகஸ்டு 523, 
உரோம், இத்தாலி

திருத்தந்தையாக: 20 ஜுலை 514 - 6 ஆகஸ்ட் 523
முன்னிருந்தவர் : புனித சிமாக்கஸ்
பின்வந்தவர் : முதலாம் யோவான்

திருவிழா நாள் : ஆகஸ்ட் 6

அமைதி ஏற்படுத்துதல்

போப்

ஏறத்தாழ ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு செல்வக் குடும்பத்தில் ஹோர்மிஸ்தாஸ் பிறந்தார். இளம் வயதினரான அவருக்கு திருமணமாகி அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தது. ஆனால் அவரது மனைவி இறந்தபோது, அவர் மறையியல் படிப்பு படித்து ஒரு குருவானவராக நினைத்தார். உரோமில் அவர் பணியாற்றிய போது, ஹோர்மிஸ்தாஸ் தனது அரசியல் செயல் திறமுடைய திறமைகளைப் பயன்படுத்தி போப் சைமாக்ஸின் ஆதரவாளர்களையும் போப்பின் எதிரி வாரன்ஸின் ஆதரவாளர்களையும் ஒன்றுபடத்த முயற்சித்தார். என்றாலும், திருச்சபையில் இது மட்டுமே விவாதத்திற்குரியதாக இருக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், கான்ஸ்டான்டி நோபிளின் மதகுரு அகாஸியஸ், இயேசுவுக்கு இறைத்தன்மை மட்டுமே உண்டு என்கிற ஓரியல்பு கோட்பாடான முரண்சமயக் கருத்தை அனுமதித்திருந்தார். இந்த அகாஸியன் கோட்பாடு, கிழக்கு மற்றும் மேற்கு திருச்சபையினரிடையே ஒரு நீண்டநாள் பிளவாக இருந்து, இந்த முரண்பாடு, ஹோர்மிஸ்தஸ் உரோமையில் இருந்தபோது உச்சநிலையை அடைந்தது.

திருத்தந்தையும் அமைதி ஏற்படுத்துபவரும் :

514 ஆம் ஆண்டில், போப் சைமாக்ஸ் இறந்தபோது, ஹோர்மிஸ்தஸ் போப் ஆனார். மேலும் திருச்சபையிலிருந்த முரண்பாடுகளைக் களைய தனது சக்தியைச் செலவழித்தார். கிழக்கு மற்றும் மேற்கு திருச்சபைகள் சமாதானம் அடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் 519 ஆம் ஆண்டு ஹோர்மிஸ்தஸ் விதிமுறை என்னும் நம்பிக்கை அறிக்கை ஒன்று இணைந்து உருவாக்கினார். இதன் மூலம் அகாஸியன் முரண்சமயக் கருத்தைக் கண்டித்தார். பேரரசர் ஜஸ்டின் 1 என்பவர் ஹோர்மிஸ்தஸின் விதிமுறையை ஏற்றுக்கொண்டார். கான்ஸ்டான்டின் நோபிளின் குடிமுதல்வரும் நூற்றுக்கணக்கான கிழக்குத் திருச்சபை பொறுப்பாளர்களும் ஒப்புதல் அளித்துக் கையயாப்பம் இட்டனர். சிறிது காலம், கிழக்கு மேற்கு திருச்சபைக்குள்ளான வேறுபாடுகள் முடிவுக்கு வந்தன. 523 ஆம் ஆண்டு, ஒரு நிலையான விருப்புரிமைக் கொடை விட்டு விட்டு ஹோர்மிஸ்தஸ் இறந்தார். ஹோர்மிஸ்தஸ் மறைந்த ஒரு பத்து ஆண்டுகள் கழித்து அவரது மகன் போப் சில்வராஸாக முடிசூட்டப்பட்டார். மேலும் அவரும் குறிப்பிட்ட சூழ்நிலையில், நிகழ்கிற தருணத்தில் ஒரு புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

செபம் :

தந்தையே, உமது அமைதியின் தூதராக, என்னை மாற்றும். எங்கு வெறுப்பு உள்ளதோ, நான் அங்கே அன்பை விதைக்கச் செய்யும். எங்கே காயம் ஏற்படுகிறதோ, அங்கே மன்னிப்பை அருளும். எங்கே ஐயப்பாடு நிலவுகிறதோ, அங்கே உறுதியையும், எங்கே அவமானம் நிலவுகிறதோ அங்கே நம்பிக்கையையும், எங்கே இருள் சூழ்ந்திருக்கிறதோ அங்கே வெளிச்சத்தையும், எங்கே வருத்தம் இருக்கிறதோ அங்வே மகிழ்ச்சியையும் விதைக்க அருள்புரியும். மகிமை நிறை தலைவரே, நான் ஆறுதல் பெறுவதற்காக, ஆறுதலை தேடி அலையவிடாதேயும். புரிந்து கொள்ளப்படுவதற்காக, புரிந்து கொள்ளச்செய்யும். பிறரை அன்பு செய்வதற்காக என்னை அன்பு செய்யும். ஏனெனில், கொடுப்பதில்தான் நாம் பெறுகிறோம். மன்னிப்பதில்தான், நாம் மன்னிக்கப்படுகிறோம். நமது இறப்பில்தான், விண்ணகவாழ்விற்குப் பிறக்கிறோம். ஆமென்.

அவரது அடிச்சுவட்டில் :

ஹோர்மிஸ்தஸ் திருத்தந்தையாக (போப்) இருந்தபோது கிழக்கு மற்றும் மேற்கு திருச்சபைகளுக்குள் இருந்த பிளவு, உலக அமைதிக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இன்று வல்லரசு நாடுகளுக்கிடையே நிகழும் போட்டிகளும், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருக்கும் நிலையும் உலக அமைதிக்கு பெரும் ஆபத்தாக உள்ளன. இந்த உலகைப் பாதுகாக்க ஹோர்மிஸ்தஸ் அயராது உழைத்தது போல இன்று, அவரது அமைதி நிலைநிறுத்தும் கூட்டமைப்பு அமெரிக்காவிலும், ஐக்கிய நாடுகளிலும் அரசியல் திறம் மாற்றம் கொண்டுவர பாடுபட்டு வருகிறது. அதனுடைய செயல்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன. 1957 ல் நியூயார்க் 7 டைம்ஸ் என்ற பத்திரிக்கையில், அணுஆயுத போரின் ஆபத்துக்களை விளக்கி அணுசக்தி கொள்கைக்காக அது ஒரு விளம்பரம் கொடுத்தது. அதன்பிறகு ஐக்கிய நாடுகள் சபையும் சோவியத் யூனியனும் அணுஆயுத சாதனங்களை சோதிப்பது தொடர்பாக கடன்களைக் காலந்தாழ்த்திக் கொடுப்பதற்கான இசைவு ஒன்றை வெளியிட்டது.

1978 ல் எம் எக்ஸ் மொபைல் மிசைல் டிப்ளாய்மெண்ட்க்கு எதிராக ஒரு வெற்றிகரமான போராட்டத்தை முன்னெடுத்தது.

1980 ல் அதனுடைய அணுஆயுதக் குறைப்பு முகாம், அணுஆயுத கருவிகள் தயாரிப்பை நிறுத்தத் தொடங்குவதற்கு ஊக்கமளித்தன.

மக்கள் அமைதிக்காக உழைத்து, செபம் செய்தால் அமைதி கைக்கூடும்.


லியோன் நகர புனித இரனேயுசு

 இரனேயு அல்லது இரனேயுஸ் அல்லது லியோன் நகர புனித இரனேயுசு (/aɪrəˈniːəs/; கிரேக்கம்: Εἰρηναῖος) (2ஆம் நூற்றாண்டு – கி.பி 202), என்பவர் உரோமைப் பேரரசின் ஒரு பகுதியாய் விளங்கிய காவுல் (தற்போது லியோன், பிரான்சு) என்னும் நகரின் ஆயராக இருந்தவர் ஆவார். இவர் துவக்ககால திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவரும் கிறித்தவ மறையின் வாத வல்லுனரும் ஆவார். இவரின் எழுத்துகள் துவக்ககால கிறித்தவ இறையியலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர் திருத்தூதர் யோவானின் சீடரான புனித பொலிகார்ப்புவின் சீடராவார்.

புனித இரனேயு
புனித இரனேயு
ஆயர், மறைசாட்சி
பிறப்பு130
Smyrna, அனத்தோலியா (தற்போதய இசுமீர், துருக்கி)
இறப்பு202
Lugdunum, Gaul (தற்போதய லியோன், பிரான்சு)
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
லூதரனியம்
ஆங்கிலிக்க ஒன்றியம்
திருவிழாஜூன் 28 (கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம்); ஆகஸ்ட் 23 (கிழக்கு மரபுவழி திருச்சபை)

தொடக்க காலத்தில் "மறை நூல்" (Scriptures) என்னும் பொதுப் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்த விவிலிய நூல்களை கடவுள் மனிதரோடு செய்துகொண்ட "உடன்படிக்கையை" (Covenant) குறிக்கும் விதமாக ஏற்பாடு (Testament) என்று முதன்முதலில் அழைத்தவர் இவரே.

கி.பி. 185ஆம் ஆண்டளவில், இவர் ஞானக் கொள்கை என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தி வாலண்டைன் (Valentinus) என்பவரின் படிப்பினையை தப்பறை என அடையாளம் காட்டினார். அக்கொள்கையினை சாடி இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

மரியாளியலினைப் பற்றி விரிவாக எழுதிய முதல் திருச்சபைத் தந்தை இவரே.

"வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால், மரியா கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார். மரியா தன் கீழ்ப்படிதலால் மனுக்குலம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக் காரணமானார்." - புனித இரனேயு

கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் ஜூன் 28 ஆகும். லூதரனியமும், அதே நாளில் இவரின் விழாவினைச் சிறப்பிக்கின்றது. மரபுவழி திருச்சபைகளில் இவரின் விழா நாள் 23 ஆகஸ்ட் ஆகும்.

Saturday, July 27, 2024

இயேசுவின் உவமைகள் - அறிமுகம்

 இயேசுவின் உவமைகள், இயேசு இஸ்ரவேல் நாட்டில் போதனை செய்யும் போது பயன்படுத்திய உவமைக் கதைகளாகும். இயேசு கூறிய பல உவமைகள் விவிலியத்தின் நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இயேசு பெரும்பாலும் உவமைகள் மூலமே போதனைகளை மேற்கொண்டார். இயேசு இவ்வாறு போதனை செய்த காலம் சுமார் மூன்று ஆண்டுகளாகும். எனவே ஆய்வாளர்கள், விவிலியத்தில் குறிப்பிடப்படாத மேலும் பல உவமைகளை இயேசு கூறியிருக்கலாம் என கருதுகின்றனர். இயேசுவின் உவமைகள் சிறிய கதையைப் போல காணப்பட்டாலும் சில உவமைகள் ஒரு வசனத்துடனேயே முடிவடைந்து விடுகின்றன.

விவிலியத்தின் நற்செய்தி எழுத்தாளர்களான மத்தேயு 17 உவமைகளையும், மாற்கு ஐந்து உவமைகளையும், லூக்கா 19 உவமைகளையும், யோவான் இரண்டு உவமைகளையும் குறிப்பிட்டுள்ளனர். சில உவமைகளை ஒன்றுக்கு மேற்பட்ட நற்செய்தியாளரும் குறிப்பிட்டுள்ளனர். விவிலியதில் மொத்தம் 42 இயேசுவின் உவமைகள் உள்ளன. ஊதாரி மைந்தன் உவமை மற்றும் நல்ல சமாரியன் என்ற இரு உவமைகள் லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்றன. யோவான் நற்செய்தியில் உள்ள இரண்டு உவமைகளும் மற்றைய நற்செய்திகளில் காணப்படவில்லை.

உவமைப் பொருள்களும் எடுத்துக்காட்டுகளும்

இயேசுவின் உவமைகளை பொதுவாக மூன்று தலைப்புகளின் கீழ் அடக்கலாம். அவையாவன:

  • விண்ணரசின் வருகை.
  • கடவுள்.
  • நீதி மற்றும் மனிதநேயம்.

என்பனவாகும். சில உவமைகளை இத்தலைப்புகளில் ஒன்றுக்கு கீழ் வகைப்படுத்தலாம். அதேவேளை மற்றும் சில உவமைகள் ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகளுக்கு பொருத்தமானவையாகும்.

விண்ணரசின் வருகை

  • வீடுகட்டிய இருவரின் உவமை (மத்தேயு 7:24-27)
  • விதைப்பவன் உவமை (மத்தேயு 13:3-23 மாற்கு 4:1-20 லூக்கா 8:5-15)

கடவுள்

  • தாலந்துகள் உவமை (மத்தேயு 25:14-30)
  • பத்து கன்னியர் உவமை (மத்தேயு 25:1-13)

நீதி மற்றும் மனிதநேயம்

  • மூட செல்வந்தன் (லூக்கா 12:16-21)
  • செல்வந்தனும் இலாசரசும் (லூக்கா 16:19-31)

இறையரசின் கொள்கைகள் பற்றிய உவமை

  • புளித்த மாவு உவமை *
  • கடுகு விதை உவமை *

Friday, July 26, 2024

இரண்டு கடன்காரர்

 இரண்டு கடன்காரர்

 லூக்கா 7:36-47

பரிசேயன் ஒருவன் அவரைத் தன்னுடன் உண்பதற்கு அழைத்தான். அவரும் பரிசேயனுடைய வீட்டுக்கு வந்து உணவருந்த அமர்ந்தார். இதோ! பாவி ஒருத்தி அந்நகரிலே இருந்தாள். பரிசேயனுடைய வீட்டில் அவர் உணவருந்தப்போகிறார் என்று அறிந்து பரிமளத்தைலம் நிறைந்த படிகச்சிமிழ் ஒன்றை எடுத்து வந்தாள். அவருடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து, அழுதுகொண்டே அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசினாள். அவரை அழைத்த பரிசேயன் இதைக் கண்டு, "இவர் இறைவாக்கினராய் இருந்தால் தம்மைத்தொடும் இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார். இவளோ பாவி" என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். இயேசு அவனை நோக்கி, " சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும் " என்றான். "கடன் கொடுப்பவன் ஒருவனுக்கு கடன்காரர் இருவர் இருந்தனர். ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கடன்பட்டிருந்தனர். கடனைத் திருப்பிக்கொடுக்க அவர்களால் முடியாமற்போகவே இருவர்கடனையும் மன்னித்துவிட்டான். அவர்களுள் யார் அவனுக்கு அதிகமாக அன்புசெய்வான்?" யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" என்றான் சீமோன். " நீர் சொன்னது சரி என்றார் அவர். பின்பு அப்பெண்ணின் பக்கம் திரும்பி, சீமோனிடம், " இவளைப் பார்த்தீரா? நான் உம் வீட்டுக்குள் வந்தபொழுது, நீர் என் பாதங்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவளோ என் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்தாள். நீர் எனக்கு முத்தமளிக்கவில்லை; இவளோ, நான் உள்ளே வந்ததுமுதல் என் பாதங்களை முத்தம் செய்து ஓயவில்லை. நீர் என் தலையில் எண்ணெய் பூசவில்லை; இவளோ என் பாதங்களுக்குப் பரிமளத்தைலம் பூசினாள். அதனால் நான் உமக்குச் சொல்வதாவது: அவள் செய்த பாவங்கள் பல மன்னிக்கப்பட்டன. அவள் காட்டிய பேரன்பே அதற்குச் சான்று. குறைவாக மன்னிப்புப் பெறுபவனோ குறைவாக அன்புசெய்கிறான் " என்றார்.

இது மனந்திருந்துதல் பற்றி கூறப்பட்ட உவமையாகும். இந்த உவமையை இயேசு சீமோன் என்ற பரிசேயர் வீட்டில் உண்பதற்காக சென்றிருந்தபோது கூறினார். இது சீமோனை பார்த்துக் கேட்ட கேள்வியாகும். 

சந்தர்ப்பம்

இயேவை சீமோன் என்ற பரிசேயர் தம்மோடு உண்பதற்கு அவருடைய வீட்டுக்கு அழைத்திருந்தார். இயேசுவும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார் அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். சீமோன் இதைக் கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார் இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். அவர் தமக்குள் சொல்லிக்கொள்வதை அறிந்த இயேசு சீமோனை நோக்கி கேள்வியாக ஒரு உவமையை கூறினார்.

உவமை

கடன் கொடுப்பவர் ஒருவிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?

பின்னுரை

சீமோன் மறுமொழியாக, "அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என் நினைக்கிறேன்" என்றார். இயேசு அவரிடம், "நீர் சொன்னது சரியே" என்றார்.பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், "இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன் இவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார்.

பொருள்

இவ்வுவமையின் பொருள் பின்னுரையிலிருந்து தெளிவாகிறது. கடவுளை அதிகமாக அன்பு செய்தால் அவர் கூடுதலான பாவங்களை மன்னிக்கிறார் என்பது இதன் பொருளாகும்.

விதைப்பவன் உவமை

 விதைப்பவன் உவமை

மாற்கு 4 : 1 - 20 

அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது;

“இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்.

பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.

முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.

* * *

இயேசு மக்களிடம் இறையரசைப் பற்றியும், இறைவனின் அன்பைப் பற்றியும், விண்ணக வாழ்வுக்கான வாழ்க்கை பற்றியும் தொடர்ந்து மக்களிடம் போதித்து வந்தார். மக்கள் அவருடைய போதனைகளின் பால் ஈர்க்கப்பட்டனர். மக்களுக்கு அவர் தொடர்ந்து வாழ்வியல் சிந்தனைகளை வழங்கிக் கொண்டே இருந்தார்.

இயேசு மனித நேயத்தின் மொத்த உருவமாய் இருந்தார். நோயாளிகளை சுகப்படுத்துவதும், ஒடுக்கப்பட்டவர்களை அரவணைப்பதும், நிராகரிக்கப்பட்டவர்களை நேசிப்பதும், பாவிகளை அரவணைப்பதும் அவரது பணிகளாய் இருந்தன‌. நாட்கள் செல்லச் செல்ல இயேசுவின் போதனைகளை விட அதிகமாய் நோய் தீர்க்கும் வல்லமைகளுக்காக அவரை மக்கள் அவரை நாட ஆரம்பித்தனர். அதன்பின் இயேசு உவமைகளால் மக்களிடம் பேசத் தொடங்கினார்.

உவமைகள் உண்மையை மறைத்து கதைகளைப் பேசுபவை. தேடல் உள்ளவர்கள் மட்டுமே உவமையின் பொருளை கண்டு கொள்ள முடியும். தூய ஆவியானவரே மறை பொருளை உணர்த்துவார்.

இந்த உவமை “நான்கு நிலங்களைப்” பேசுகிறது. வழியோரம், முட்புதர், பாறை நிலம், நல்ல நிலம் என்பவையே அந்த நிலங்கள். இன்னொரு விதமாகப் பார்த்தால் இது ஆறு வகை நிலங்களைப் பேசுகிறது. நல்ல நிலத்தை நல்ல நிலம் 1, 2, 3 என மூன்றாகப் பார்க்கலாம்.

இந்த உவமை இயேசு சொன்ன உவமைகளில் முக்கியமானது. மூன்று நற்செய்தி நூல்களிலும் ( மத்தேயு, மார்க், லூக்கா ) இடம்பெற்ற சில உவமைகளில் இதுவும் ஒன்று. இயேசுவே நேரடியாகப் பொருள் கூறிய வெகு சில உவமைகளில் இதுவும் ஒன்று.

இந்த உவமை சில சிந்தனைகளை நமக்குள் உருவாக்குகிறது.

1. இறைவனின் வார்த்தைகளே விதைகள் என்பதை இயேசுவே தெளிவு படுத்துகிறார். அந்த விதைகளை விதைக்கும் மனிதர்கள் நற்செய்தியை அறிவிப்பவர்கள் என்பதையும் விவிலியம் சொல்கிறது. விதைக்கின்ற பணியை செய்பவனே விதைப்பவன். அவனுடைய நிறம், உயரம், படிப்பு, வேலை, ஆடை, வசதி எதுவுமே இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே இறை வார்த்தையை அறிவிக்க நமக்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் என்பதே கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். இறைவார்த்தையை விதைக்க வெளிப்படையான அலங்காரங்களோ, சம்பிரதாயங்களோ எதுவும் தேவையில்லை.

2. விதைகள் இறை வார்த்தைகள். எந்தப் பையில் சுமக்கிறோம் என்பதை வைத்து விதைகளின் தன்மை மாறுவதில்லை. பைகள் அழகாய் இருக்கிறதா, பெரிதாய் இருக்கிறதா என்பதெல்லாம் முக்கியமற்ற சங்கதிகள். அவை விதைகளை பத்திரமாய் சுமந்து செல்ல வேண்டும் என்பது மட்டுமே தேவையானது. இறைவார்த்தைகளைச் சொல்ல பேச்சு, எழுத்து, வாழ்க்கை, கலைகள், வாட்ஸப் டுவிட்டர் ஃபேஸ்புக் என‌ எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்தப் பை இருப்பவர்கள் மட்டுமே விதைக்கும் பணியைச் செய்ய முடியும் என்பது தவறான சிந்தனை.

3. விதைக்கின்ற விதைகள் எல்லாமே பயன் தருவதில்லை. பயன் தருகின்ற விதைகளும் ஒரே மாதிரி பயனளிப்பதில்லை . விவசாயம் வரவில்லையே என உடைந்து போகத் தேவையில்லை. விதைத்தவை பாழாயினவே என பதறத் தேவையில்லை. இறைவனின் வார்த்தைகள் அதற்குரிய பணியை அதுவாகவே செய்து விடும். எவ்வளவு கனி கிடைக்கும் என எண்ணிப் பார்த்து விதையை நாம் ஊன்றத் தேவையில்லை. இறைவனின் சித்தப்படி கனி கொடுக்கட்டும் என சிந்திப்பதே போதுமானது.

4. நிலங்களின் இயல்புகள் நிலையானவை அல்ல. நன்றாக உழுது நீர்ப்பாய்ச்சினால் வழியோரமும் வயலாக முடியும். முட்களையும் கற்களையும் அகற்றி ஆழ உழுதால் முட்புதர்கள் வயல்வெளிகளாக முடியும். ஆழ உழுது செப்பனிட்டால் பாறைநிலமும் விளைநிலமாக முடியும். அதே போல, கவனிக்கப்படாமல் கைவிடப்பட்டால் நல்ல வயல் கூட பயனற்ற நிலமாய் மாறக் கூடும். எனவே நிலங்களை நிராகரிக்காமல், அவற்றை செப்பனிடும் வழிகளை மேற்கொள்வதே சிறப்பானது. மனித மனங்களை இதயங்கள் என கொண்டால், அந்த இதயங்களைத் தயாராக்குவதை உழுதல் எனக் கொள்ளலாம்.

5. எல்லா நிலங்களும் அருகருகே தான் இருக்கின்றன. “விதைக்கும் போது” தான் விதைகள் இத்தகைய வேறுபட்ட நிலங்களில் விழுகின்றன. அருகருகே இருந்தாலும் முழுக்க முழுக்க வித்தியாசமான மனநிலையில் தான் மக்கள் இருப்பார்கள் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. கூடவே இருந்தாலும் நல்ல நிலம் அருகே உள்ள வழியோரத்தை வயலாக்க முடியாது. அது தன்னகத்தே மாற்றத்தை கொண்டால் மட்டுமே தன்மையை மாற்றிக் கொள்ள முடியும். எனவே நல்ல நிலத்தின் அருகிலேயே இருக்கிறேன் விளைச்சல் நிச்சயம் எனும் சிந்தனைகள் தவறானவை.

6. விதைகள் இறைவார்த்தைகள். விதைகளை உடைத்தாலோ, விதைகளைச் சிதைத்தாலோ அவை பயன் தரப் போவதில்லை. நெல்லை விதைக்கப் போகும் விதைப்பவன் விதை கடினமாய் இருக்கிறது என உமியை விலக்கி விட்டு விதைத்தால் அந்த விதையினால் எந்த பயனும் இல்லை. விதைப்பவன் விதைகளை அப்படியே விதைக்க வேண்டும். அப்போது தான் விதைகளுக்குள் இருக்கின்ற உயிர் வெளிவரும். விதைப்பது மட்டுமே விதைப்பவனுடைய பணி. அதை முளைக்க வைப்பது இறைவனின் பணி.

7. விதைத்தவன் பின்னர் தூங்கிப் போவதில்லை. அந்த நிலத்தை தொடர்ந்து கண்காணிப்பான். சரியான கால இடைவெளியில் நீர் ஊற்றுவான். தேவையான உரங்களை இடுவான். இவையெல்லாம் விதைப்பவன் செய்கின்ற பணிகள். இறைவார்த்தை முளைத்து வரும்போது அதை அன்புடன் பராமரிப்பதும், கனிகொடுக்கும் வரையில் கூட இருப்பதும். அந்த கனிகளே விதைகளாய் மாறுவதை உறுதிசெய்வதுமெல்லாம் உண்மையான ஒரு விவசாயியின் பணிகள். அதை இறைவன் வெளிப்படையாகச் சொல்லவில்லையெனினும் நிச்சயம் எதிர்பார்க்கிறார்.

8. வழியோர நிலம் காலம் காலமாய் பல்வேறு மனிதர்கள் நடந்து இறுகிப் போன நிலம். யார் நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் நிலம் என வைத்துக் கொள்ளலாம். கடின இதயத்தோடு இருக்கின்ற மனிதர்கள் இவர்கள். இங்கே இறைவார்த்தைகள் விழும்போது அவை எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. அடுத்த மனிதர்கள் நடக்கும்போது உடைபடலாம். அல்லது சாத்தான் எனும் பறவையின் அலகுக்கு இரையாகலாம். இவை இறைவார்த்தையை சற்றும் ஏற்றுக் கொள்ளாத மனிதர்களைப் போன்றது.

9. பாறை நில விதை சட்டென முளைக்கிறது. வேர்கள் கீழிறங்க கீழிறங்க அது பாறையில் மோதுகிறது. அதற்கு மேல் கீழே செல்ல முடியாமல் அது அங்கேயே தங்கிவிடுகிறது. ஆனால் தொடக்கத்தில் அது சட்டென வளர்கிறது. மகிழ்ச்சியோடு வார்த்தையை ஏற்றுக் கொள்பவர்களெல்லாம் நீண்டகாலம் நிலை நிற்பார்கள் என்று சொல்வதற்கில்லை. முதலில் செழித்து வளர்வதால் அவர்கள் ஆன்மீக ஆழம் கொண்டவர்கள் என நினைப்பதும் தவறு. மெதுவாக முளைப்பவர்கள் ஆன்மீக சிந்தனையற்றவர்கள் என அளவிடுவதும் தவறு. மனம் பக்குவமாய் இருக்கிறதா என்பதைப் பொறுத்தே இவை அமையும். விதை மட்டுமே விளைச்சல் தருவதில்லை, நிலத்தின் ஏற்றுக் கொள்ளும் தன்மை இங்கே மிக முக்கியம்.

10. நகர்ந்து கொண்டே இருக்கும் விதையால் வேர்விட முடிவதில்லை. சிலருக்கு உலகக் கவலைகள், சிலருக்கு தனிப்பட்ட கவலைகள், சிலருக்கு உலக இலட்சியம், சிலருக்கும் தேவையற்ற பயங்கள். இப்படி ஏதோ ஒரு விஷயம் அவர்களை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது. முட்கள், கற்கள் இவைகளோடு சேர்ந்து இறைவார்த்தையும் வளர்கிறது. ஒரு சிக்கல் வரும்போது இறைவார்த்தையைப் பற்றிக் கொள்ளாமல் சுய சிந்தனைகளை இவர்கள் பற்றிக் கொள்வார்கள். இறைவார்த்தையை சுய முட்களும், கற்களும் சிதைத்து விடுகின்றன. விதைகள் வளரவேண்டுமெனில் மற்ற சிந்தனைகளை அகற்ற வேண்டியதும், முழுமையான நம்பிக்கையை விதையின் மேல் வைக்க வேண்டியதும் அவசியம்.

11. நல்ல நிலமும் ஒரே மாதிரி பயனைத் தருவதில்லை. 30, 60 மற்றும் 100 மடங்கு என்பது விவசாயத்தில் பிரமிப்பு விளைச்சல். சராசரியாக 8 மடங்கு விளைச்சல் என்பதே அதிகபட்ச விளைச்சல் என்பார்கள். 30 மடங்கு, 100 மடங்கு என்பதெல்லாம் அசாதாரண வளர்ச்சி. இறைவார்த்தைக்கு நிலம் எவ்வளவு ஒத்துழைக்கிறது என்பதே விளைச்சலை நிர்ணயிக்கிறது. நிலம் மிகவும் பக்குவப்பட்ட நிலமாய், அதிக பயன்கொடுக்க ஆர்வமாய் இருந்தால் விளைச்சல் மிக அதிகமாய் இருக்கும். விளைச்சல் எவ்வளவு என்பதையல்ல, விளைச்சல் கொடுக்கிறது என்பதையே இறைவன் பார்க்கிறார். எனவே தான் மூன்று நிலங்களையுமே “நல்ல நிலம்” என்கிறார் இயேசு.

12. “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என இறைமகன் முத்தாய்ப்பாய் உவமையை முடிக்கிறார். காதுகளில் இறைவார்த்தை விழுவதால் மட்டுமே ஒருவர் “வார்த்தையைக் கேட்டவர்” ஆகி விட முடியாது. அந்தக் காதுகளுக்குள்ளே நுழைந்து, மனதில் விழுந்து, இரண்டறக் கலந்தால் மட்டுமே பயன் தரமுடியும். கேட்பதற்கான ஆர்வம் உடையவர்களால் மட்டுமே வார்த்தை எனும் உணவை உண்டு, செரிக்க வைத்து, உடலுக்கு ஆற்றலாய் மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம். 

கொடிய குத்தகைக்காரர் உவமை

 கொடிய குத்தகைக்காரர் உவமை

மத்தேயு 21 : 33 - 46 

நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.

மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.

தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.

எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?” என இயேசு கேட்டார். அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள்.

இயேசு அவர்களிடம், “‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்தக் கல்லின்மேல் விழுகிறவர் நொறுங்கிப்போவார். இது யார் மேல் விழுமோ அவரும் நசுங்கிப் போவார்” என்றார்.

தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர். அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.

இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்த இன்னொரு உவமையாக இது விளங்குகிறது. தலைமைக் குருக்கள், பரிசேயர் இவர்களை குறிவைத்தே இயேசு இந்த உவமையைச் சொன்னார். அது அவர்களுக்கும் புரிந்திருந்தது. எனவே தான் அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்.

இறைவன் தனது மக்களைப் பராமரிக்க தலைவர்களையும், வழிகாட்டிகளையும் ஏற்படுத்துகிறார். அவர்கள் வழி தவறிப் போகும் போது கடவுளின் கோபம் அவர்கள் மேல் விழுகிறது !

இறைவன் நாம் கனிகொடுக்க வேண்டும் என விரும்புகிறார். நாம் பிறரை கனிகொடுக்கும் வாழ்க்கைக்குள் வழிநடத்த வேண்டும் என விரும்புகிறார். இந்த வாழ்க்கை நமக்குச் சொந்தமானதல்ல, இது இறைவனின் சித்தத்தைச் செயல்படுத்தும் தளம்.

இந்த உவமை பல சிந்தனைகளை நமக்குள் எழுப்புகிறது.

1. நிலத்தின் சொந்தக்காரர் நான்கு விஷயங்களைச் செய்கிறார். முதலாவது, நிலத்தில் திராட்சைத் தோட்டம் போடுகிறார். திராட்சைத் தோட்டம் செழித்து வளர்வதற்கு ஏதுவான‌ வகையில் நிலத்தை அவர் பக்குவப்படுத்திய பின்பே திராட்சைத் தோட்டத்தை அமைத்திருக்க வேண்டும். இறைவன் மக்கள் வளமாகவும், நலமாகவும் வாழ்வதற்கான வழிவகைகளை செய்யாமல் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பதை இது விளக்குகிறது.

2. இரண்டாவதாக அவர் ஒரு வேலி அமைக்கிறார். இது பாதுகாப்பைக் குறிப்பது. இறைவனில் நமக்குக் கிடைக்கும் உன்னதமான பாதுகாப்பு இது என கொள்ளலாம். தனது மக்களை இறைவன் பாதுகாப்புக்குள் வைக்கிறார். உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத் தொடுகிறான் என்று சொன்ன இறைவன், தனது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறார்.

3. பிழிவுக் குழி ஒன்றை அமைக்கிறார் எஜமான். அதில் தான் பழங்கள் பதப்படுத்தப்படும், விளைச்சல்கள் சேமிக்கப்படும். விளைகின்ற கனி எதுவும் வீணாகாதபடி அதை பாதுகாக்கும் தலைவனுடைய மனம் இதில் வெளிப்படுகிறது.

4. நான்காவதாக ஒரு காவல் மாடம் அமைக்கிறார். காவல்மடம் தங்குவதற்கானது, கூடவே தனது தோட்டம் விஷமிகளால் தகர்க்கப்படாமல் இருக்க செய்கின்ற பாதுகாப்புக்கானது. இப்படி தேவையான அனைத்தையும் செய்து கொடுத்த பின்பே தலைவன் தனது நிலத்தை பராமரிக்கும் பொறுப்பை தொழிலாளர்களிடம் ஒப்படைக்கிறார். தகுதிக்கு மீறியவற்றையோ, நம்மால் இயலாதவற்றையோ அவர் கேட்பதில்லை.

5. தலைவரின் நெடும்பயணம் இரண்டாம் வருகைக்கு முந்தைய இடைவெளியைக் குறிப்பிடுகிறது. இது தலைவரின் நீண்ட பயணத்துக்கு ஒப்பாய் இருக்கிறது. தலைவர் நீண்ட பயணம் முடித்து ஒருநாள் திரும்பி வருவார் எனும் உத்தரவாதம் இதில் தெரிகிறது. ஆனால் அவர் எப்போது வருவார் என்பது தெரியாது, ஆனால் நிச்சயம் அவர் வருவார்.

6. தலைவர் தமக்குச் சேரவேண்டிய பழங்களை வாங்க ஒருநாள் நிச்சயம் வருவார். அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவர் எதிர்பார்ப்பது கனிகளைத் தான். அவருக்கேற்ற கனிகளை தோட்டம் தரவேண்டும் என விரும்புகிறார். அதற்கு ஏற்ற வகையில் தோட்டத்தைப் பராமரிக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாய் இருக்கிறது. அதுவே அவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. நாம் கனிகொடுக்கிறோமா ? இறைவனுக்கேற்ற கனி கொடுக்கிறோமா என்பதை மறுபரிசீலனை செய்யும் ஒரு வாய்ப்பாகவும் கொள்ளலாம்.

7. இறைவனின் பணியாளர்கள் தலைவனுக்கான பணியை நிறைவேற்ற வருபவர்கள். அவர்களை நையப் புடைப்பதும், கொல்வதும், மிகப்பெரிய பாவம். இறைவாக்கினர்களை யூத மக்கள் நிராகரித்த நிகழ்வை இது சுட்டிக் காட்டுகிறது. எனினும் கடவுளின் கோபம் வெளிப்படவில்லை. மக்கள் மீது அதீத அன்பு கொண்ட இறைவன் மேலும் அதிக பணியாளர்களை அனுப்புகிறார். எனினும் மக்கள் மனம் திரும்பவில்லை. அப்போதும் இறைவன் அன்பு கொள்கிறார். தனது மகனையே அனுப்புகிறார்.

8. இயேசுவை நிராகரிக்கும் நிலையே தலைவரின் மகனை நிராகரிப்பது. மகன் சொத்துக்கு உரியவர் என்பது தொழிலாளர்களுக்குத் தெரிகிறது. இருந்தாலும் அவர்கள் திராட்சைத் தோட்டத்துக்கு வெளியே தள்ளி அவரைக் கொல்கின்றனர். கொல்கொதா மலையின் உச்சியில் இயேசு மரணமடைவதை இது விளக்குகிறது. மகனைக் கொன்றதும் கடவுளின் சினம் வெளிப்பட்டு அனைவரையும் அழித்துவிடும் என மக்கள் நினைத்தனர். ஆனால் இறைவனின் அன்பு எல்லை கடந்தது. அவர் தூய ஆவியானவரை நமக்கு அளித்து நமக்கு மீண்டும் ஒரு கிருபையின் காலத்தைக் கொடுத்திருக்கிறார்.

9. எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இறைமகன் இயேசுவே திருச்சபையின் மூலைக்கல் ஆகிறார். அவரை வைத்தே திருச்சபையின் கற்கள் கட்டி எழுப்பப்படுகின்றன. இயேசுவின் மீது விழுகின்ற நபர்கள் உடைகின்றனர், இயேசுவின் கோபம் யார் மீது விழுகிறதோ அவரும் உடைகிறார். ஆதியும், அந்தமுமான இறைவனாய் இருக்கிறார் இயேசு. நாம் உடைகையில் அவரில் இணைகிறோம். அவரை உடைக்க நினைகையில் அழிவை அணைக்கிறோம்.

10. யூத மக்களுக்கு மட்டுமென இறைவன் உருவாக்கி வைத்திருந்த மீட்பின் திட்டம் பிற இனத்தாருக்குக் கிடைக்கும் எனும் நம்பிக்கையையும், உறுதியையும் இந்த உவமை விளக்குகிறது. இறையாட்சி உங்களிடமிருந்து அகற்றப்படும் எனும் வார்த்தைகள் யூதத் தலைவர்களை எரிச்சலூட்டின. அவர்கள் சட்டத்தின் மூலம் இறையாட்சியை பெற்றுக் கொள்ளலாம் என நினைத்தவர்கள். ஆனால் இறைமகனோ கனிகொடுக்கும் வாழ்க்கையையே எதிர்பார்க்கிறார்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்

காணமல் போன திராக்மா

 காணமல் போன திராக்மா

லூக்கா 15: 8 - 10 

பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.

‍இயேசு ஒருமுறை தொடர்ச்சியாக மூன்று உவமைகளைப் பேசினார். முதலாவது காணாமல் போன ஆடு, இரண்டாவது காணாமல் போன திராக்மா மூன்றாவது காணாமல் போன மகன். இறைவன் தனது மக்கள் மீது கொண்டிருக்கும் அன்பும், மக்கள் அவருடைய அன்பில் வாழவேண்டும் ஏக்கமுமே அந்த உவமைகளில் வெளிப்பட்டன.

இந்த உவமையில் தொலைந்து போன வெள்ளிக்காசான திராக்மாவைக் கண்டுபிடிக்கும் ஒரு பெண்ணின் உவமையை இயேசு பேசுகிறார். ஒரு திராக்மா என்பது மிகவும் குறைவான ஒரு தொகை. இன்றைய மதிப்பில் ஐம்பது ரூபாய் என வைத்துக் கொள்ளலாம். அந்த நாணயத்தைத் தொலைத்த பெண் உடனடியாக அதைத் தேடிக் கண்டுபிடிக்க பரபரப்பாய் இருக்கிறாள்.

அன்றைய பாலஸ்தீனத்தில் ஒரு வழக்கம் இருந்தது. ஏழை மணப்பெண்கள் தங்களுடைய திருமணத்திற்காக பத்து வெள்ளிக்காசுகளைச் சேமிப்பார்கள். இந்த வெள்ளிக்காசுகளை மாலையாக கழுத்தில் அணிவிப்பார் மணமகன். சில வேளைகளில் மணமகனே அந்த வெள்ளிக்காசுகளை தருவதும் உண்டு. நமது ஊர் வழக்கப்படி தாலி அது எனலாம்.

எனவே விலையில் குறைவாய் இருந்தாலும் அது உணர்வுபூர்வமாக மிக உயர்ந்த விலையுடையது. பாலஸ்தீன மக்களுக்கு மிகவும் பரிச்சயமான அந்த உவமையையே இயேசு சொல்கிறார்.

  • அ, முதலில் காசு பத்திரமாக இருக்கிறது,
  • ஆ, பின்னர் தொலைந்து போகிறது,
  • இ,தொலைந்து போனதை அந்தப் பெண் உணர்கிறார்,
  • ஈ, தேட வேண்டும் என முடிவு செய்கிறார்,
  • உ, உடனே அதை செயல்படுத்துகிறார்,
  • ஊ, கவனமாகத் தேடுகிறார்,
  • எ, விளக்கைக் கொளுத்தி தேடுகிறார்,
  • ஏ, வீட்டைக் கூட்டி தேடுகிறார்,
  • ஐ, கண்டு பிடிக்கும் வரை தேடுகிறார்,
  • ஒ, கண்டு பிடித்ததும் மகிழ்கிறார்,
  • ஓ, அண்டை வீட்டாருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்,
  • ஔ, அதை பத்திரமாக வைக்கிறார்,
  • ஃ, மீண்டும் தொலைந்து விடாமல் பாதுகாக்க முடிவெடுத்திருக்கலாம்.

என இத்தனை விஷயங்களும் நமக்கு படிப்படையான ஆன்மீக மீட்பை விளக்குகிறது. அல்லது தொலைந்து போன நமது ஆன்மீக வாழ்க்கையை எப்படி மீட்டெடுப்பது என்பதை விளக்குகிறது.

இந்த உவமை சில படிப்பினைகளை நமக்குத் தருகிறது.

1. தனது அன்பில் நிலைத்திருக்கின்ற ஒரு மனிதர் தொலைந்து போய்விட்டால் இறைமகன் அதை எளிதில் விட்டு விடுவதில்லை. உடனடியாக தனது ஆத்மார்த்தமான முயற்சியை வெளிப்படுத்தி அந்த மனிதனை மீட்கும் வழிகளை யோசிக்கிறார். அந்த மனிதர் உலகின் பார்வைக்கு ஒரு திராக்மா எனுமளவுக்கு மிகவும் மலிவானவனாக இருந்தாலும் இறைவன் பார்வையில் மிக உயர்ந்தவன். காரணம் இறைவன் பார்வையில் நாம் அனைவருமே விலைமதிப்பற்ற அவருடைய பிள்ளைகள். இறைவன் நம்மை உணர்வு பூர்வமாக பொதிந்து வைத்திருப்பவர். எனவே தான் நாம் விலகும்போது அவர் பரிதவிக்கிறார். இங்கே இறைவனை ஒரு பெண்ணுடன் ஒப்பிடுவதன் மூலமாக ஆண்பெண் வெறுபாடுகள் விண்ணக வாழ்வில் இல்லை என்பதையும், இறைவனின் பார்வையில் அனைவரும் சமமே என்பதையும் மறைமுகமாக விளக்குகிறார்.

2. இறைவனின் அன்பில் இருக்கின்ற நபர்களில் ஒரு நபர் தொலைந்து போகிறார். தான் தொலைந்து போனதையே அந்த நாணயம் அறியவில்லை. அவரை யாரேனும் கண்டெடுத்தால் மட்டுமே மீட்பு உண்டு. நாணயத்தினால் சொந்தமாய் எதையும் செய்து விட முடியாது. அத்தகைய சூழலில் இறைவன் நம்மைத் தேடி வருகிறார். கண்டடைந்தால் அவர் அடைகின்ற மகிழ்ச்சி அளவிட முடியாததாய் இருக்கிறது. ஒரு திருச்சபையில் இருக்கின்ற நபர்களில் ஒருவர் இதயத்தால் தொலைந்து போகலாம். தான் தொலைந்து போனதையே அறியாமல் இருக்கலாம். அவரை இறைவார்த்தை வெளிச்சத்தில் அவருக்கே காட்டுவதும் நமது கடமையே.

3. நாணயம் “வீட்டில் தான்” தொலைந்து போகிறது. நமது வீட்டில் உள்ள நபர்களில் ஒருவர் இறைவனின் அன்பை விட்டு விலகிச் செல்வதைக் கூட இது குறிக்கலாம். சின்ன வயதில் இறைவனோடு இணைந்து இருந்து விட்டு, வளர வளர அவரது அன்பை விட்டு விலகி, தொலைந்தே போன வாழ்க்கை அது. அந்த நபரை நாம் தேடித் தேடிக் கண்டெடுத்து, மீட்பின் பாதையில் கொண்டு வரவேண்டும் என்பதை இந்த வாசகம் குறிப்பால் உணர்த்துகிறது.

4. நாணயம் தொலைந்ததை அறிந்ததும் அந்தப் பெண் பதட்டமடைகிறார். இரவு நேரத்தில் தான் அதை அறிந்து கொள்கிறார். சரி, விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என அவர் நினைக்கவில்லை. அந்த இரவிலேயே விளக்கை ஏற்றுகிறார். அந்தக் காலத்தில் வீட்டின் தரையில் வெப்பம் தாக்காமல் இருக்க வைக்கோல் போன்றவற்றை போட்டு வைப்பதுண்டு. அவற்றுக்கு இடையில் நாணயம் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்பது அவருக்குப் புரிகிறது. அது எளிதான வேலையல்ல. நீண்ட நேரமாகலாம். தரையில் கிடக்கும் வைக்கோல், புல்லை எல்லாம் வெளியேற்றி இன்ச் இஞ்சாகத் தேடவேண்டும். அந்த கடின வேலைக்கு அந்தப் பெண் தயாராகிறாள். அதுவும் காலைவரை காத்திருக்காமல் உடனடியாகக் களத்தில் குதிக்கிறார்.

5. விளக்கைக் கொளுத்துதல் என்பது இறைவார்த்தை வெளிச்சத்தை பயன்படுத்துவதன் குறியீடு. தொலைந்து போன ஒருவரை இறைவனிடம் கொண்டுவர இறை வார்த்தைகள் தான் நமக்குத் துணை புரியும். இறை வார்த்தையின் வெளிச்சம் படரப் படர இருள் விலகுகிறது. இருள் விலகும் போது இருளுக்குள் தொலைந்து கிடப்பவர்கள் வெளிச்சத்துக்கு வருகிறார்கள். ஒருவர் பாவ வழியில் தொலைந்து போனால் அவரைக் கண்டுபிடிக்க ஒரே வழி இறைவார்த்தை வெளிச்சமே.

6. கவனமாகத் தேடுகிறாள் அந்தப் பெண். “தேடுதல்” ஆன்மீக வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம். நமது வாழ்க்கையில் நாம் ஆன்மீகத்தை விட்டு விலகிச் செல்லும் இடங்கள் அனேகம். அவை எவை என தேடிக் கண்டுபிடிக்க கவனம் மிக அவசியம். நமது வீட்டில் இருப்பவர்கள் தொலைந்து போனால், திருச்சபையில் இருப்பவர்கள் தொலைந்து போனால், என எல்லா சூழல்களிலும் மிக முக்கியத் தேவை கவனமுடன் தேடுதல். இறைவார்த்தை வெளிச்சத்துடன் தேடுதல்.

7. வீட்டைப் பெருக்குதல் என்பது குப்பைகளை விலக்குதல் எனலாம். உலக கவலைகள், உலகைக் குறித்த சிந்தனைகள், உலக இச்சை போன்றவற்றின் அடியில் புதைந்து கிடக்கும் மனிதர்களை வெளிக்கொணர அந்த குப்பைகளை அகற்றுதல் முக்கியமான தேவை. வீட்டைப் பெருக்கும் போது அந்த நாணயம் துடைப்பத்தில் பட்டு ஒலி எழுப்பலாம். தன்னை உணர்கின்ற தருணம் அது. தான் தொலைந்து போனதையே அறியாத மனிதர் ஒரு வெளிச்சத்தில், ஒரு தூய ஆவியானவரின் தொடுதலில் தன்னை உணர முடியும்.

8. அந்தப் பெண் இரவில் விளக்கைக் கொளுத்தி நாணயத்தைத் தேட ஆரம்பிக்கிறாள். வெகு நேரம் தேடியிருக்கக் கூடும். அந்த பெண் நாணயத்தைக் கண்டு பிடித்தபோது நள்ளிரவைத் தாண்டியிருக்கலாம், அதிகாலை 2, 3 மணியாகக் கூட இருக்கலாம். கண்டு பிடித்த “உடனே” அவள் அண்டை வீட்டாரையெல்லாம் எழுப்புகிறாள். ஆனந்தத்தில் ஓடுகிறாள். நள்ளிரவு என்றும் பார்க்காமல், எங்கும் ஓடித் திரிகிறாள். அந்த அளவுக்கு ஆனந்தம் அவளை ஆட்கொள்கிறது. காலையில் எழுந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என அவள் நினைக்கவில்லை. அவளுடைய பரவசத்தின் உச்சம் அவளை அப்படி அலைய வைக்கிறது. இறைவனும் இப்படித்தான். தொலைந்து போன ஒரு நபரைக் கண்டு பிடிக்க முடியும் போது அளவற்ற ஆனந்தம் அடைகிறார்.

9. இறைவன் பார்வையில் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள். ஒருவர் தொலைந்து போனால் இன்னொருவரை வைத்து அந்த இடத்தை நிரப்ப அவர் நினைப்பதில்லை. ஒன்று தானே தொலைந்தது மீதி 9 இருக்கிறதே என சும்மா இருப்பதில்லை. ஒவ்வொருவரும் இறைவனுடைய கொடையாக இந்தப் பூமியில் வருகின்றனர். அவர்கள் அனைவரும் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றவேண்டும், அவரது அன்பின் நிலைக்க வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார்.

10. தனது மாலையிலிருந்து ஒரு நாணயம் தொலைந்து போனதை அந்த பெண் சட்டென கண்டுகொள்கிறார். தனக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவில் ஒரு விரிசல் வந்ததை அவள் கண்டுகொள்கிறாள். அப்படி ஒரு சூழல் எழும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த உவமை சொல்கிறது எனலாம். அப்படிப்பட்ட சூழலில் உடனடியாக இறைவார்த்தை எனும் விளக்கைக் கொளுத்தி, தூய ஆவியின் துணையைக் கொண்டு, மனதில் இருக்கும் குப்பைகளைக் கூட்டி வெளியேற்றி மீண்டும் இறைவனின் அன்பில் இணையவேண்டும். இறைவனுக்கும் நமக்கும் இடையேயான உறவு ஒரு சின்ன பிரிவு வந்தால் கூட உடனடியாக அதை நிவர்த்தி செய்ய வேண்டும். அப்போது மீட்பினைத் தவற விட மாட்டோம்.

செம்மரியா, வெள்ளாடா !

 செம்மரியா, வெள்ளாடா !

மத்தேயு 25:31-46

“வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.

ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,

‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?’ என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை’ என்பார்.

அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.

இயேசு கடைசியாகச் சொன்ன உவமை இது ! இதை உவமை என்று சொல்வதை விட உண்மையாய் நடக்கப் போகும் நிகழ்ச்சியின் ஒரு காட்சி என சொல்லலாம். செம்மறியாடு, வெள்ளாடு எனும் உவமைகள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இதை உவமை என எடுத்துக் கொள்ளலாம்.

சுவர்க்கம் என்பதும், நரகம் என்பதும் முடிவில்லாதவை. சுவர்க்கத்தில் நுழைபவர்கள் அதன்பின் எந்தக் கவலையும் இன்றி நிலைவாழ்வை இறைமகனோடும், இறைமக்களோடும் கொண்டாடுவார்கள். முடிவில்லா நரகத்துக்குச் செல்பவர்களோ வேதனையில் முடிவில்லா அழுகையில் அமிழ்வார்கள். சுவர்க்கம் எவ்வளவு சத்தியமோ, அந்த அளவுக்கு நரகமும் உண்டு என்பதே புரிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம்.

இந்த உவமையும் இறைமகனின் இரண்டாம் வருகையைக் குறித்த ஒரு உவமையே. இரண்டாம் வருகையில் எப்படி நியாயத் தீர்ப்பு இருக்கும் என்பதை இந்த உவமை விளக்குகிறது.

முதல் முறை இறைமகன் வந்ததற்கும், இரண்டாம் முறை அவர் வரப்போவதற்கும் சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.

முதல் முறை அவர் மனிதனாக வந்தார், அடுத்த முறை அவர் நீதிபதியாக, நியாயம் தீர்க்கும் நடுவராக வருவார்.

முதலாவது அவர் மண்ணில் இறங்கி வந்தார், அடுத்த முறை விண்ணில் தான் அவரது வருகை இருக்கும்.

முதல் முறை அவர் தாழ்மையின் வடிவெடுத்து, தொழுவத்தில் வைக்கோல் கூட்டில் வந்து பிறந்தார். அடுத்த முறையோ மாட்சிமை மிகு அரியணையில் தான் அவர் அமர்ந்திருப்பார்.

முதல் முறை வந்தபோது இயேசு மக்களைத் தேடிச் சென்றார். அவர்களுடைய தேவைகளைச் சந்தித்தார். அவர்களோடு உரையாடினார். அவர்களுக்கு வாழ்க்கை நெறியைக் காட்டினார். இரண்டாம் வருகையில், அவர் அமர்ந்திருக்க மக்களினங்கள் எல்லோரும் அவரிடம் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்.

முதல் முறை வந்தபோது மக்களை ஒன்று சேர்க்கச் சொன்னார் இயேசு. உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள். எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் என்றார். இப்போதோ, சேர்ந்தவர்களிடம் பிரிவினையை நிகழ்த்துகிறார்.

முதல் வருகையின் போது இயேசு தனது பணியை நிறைவேற்ற ஓய்வின்றி உழைத்தார். இரண்டாம் வருகையில் நிதானமாய் இருக்கையில் அமர்ந்திருப்பார்.

இந்த பகுதி விவிலியத்தின் மிக முக்கியமான பகுதி எனலாம். நமது விண்ணக வாழ்க்கைக்கான பாடம் இதில் இருக்கிறது. 

இந்த பகுதி சொல்லும் சில முக்கியமான செய்திகளைப் பார்ப்போம்.

1. நியாயத் தீர்ப்பின் ஆடுகளைப் பற்றி மட்டுமே இந்த உவமை பேசுகிறது. அதாவது வெள்ளாடுகளையும் செம்மரியாடுகளையும் பிரிக்கின்ற நிகழ்வு. இயேசுவை ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்களுக்கான தீர்ப்பாக இதைக் கொள்ளலாம். ஆடுகளுக்கும், ஓநாய்களுக்கும் இடையேயான பிரிவோ அல்லது ஆடுகளுக்கு வேறெந்த விலங்குகளுக்கும் இடையேயான பிரிவு அல்ல இது. எனவே இதை உண்மையாகவே இறைவனின் சித்தப்படி வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்கும், போலியான வாழ்க்கை வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரிவினை எனலாம்.

2. இறையாட்சி உலகம் தோன்றிய போதே உருவாக்கப்பட்டது எனும் மாபெரும் உண்மை. இது இறைவனின் அன்பை வெளிப்படுத்துகிறது. இது மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது. அதில் நாம் அனைவரும் செல்லவேண்டும் என்பதே இறைவனின் சித்தமாக இருக்கிறது. அதற்காகத் தான் அவர் தனது மகனையே உலகிற்கு அனுப்பி வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என வாழ்ந்து காட்டினார். நமது பாவங்களுக்காக சிலுவையில் உயிர்விட்டு மீட்பையும் நீட்டினார். தந்தை உருவாக்கி வைத்த வீட்டுக்குச் செல்லும் மகனின் ஆனந்த மனநிலையோடு நாம் அதை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்குரிய வாழ்க்கையை வாழவேண்டும்.

3. இல்லை என நம்மிடம் கையேந்தும் மனிதர்களுக்கு சாக்குப் போக்கு சொல்லாமல் உதவும் மனநிலையை இறைமகன் இயேசு எதிர்பார்க்கிறார். நாம் உதவுகின்ற நபர்களில் இறைவனைக் காண வேண்டும். ஏழைகளின் மீது கரிசனையும், இரக்கமும் இல்லாதவர்களுக்கு விண்ணக வாழ்வு கிடைப்பதில்லை என்பதை இந்த உவமை விளக்குகிறது.”சிறியவர்” என இயேசு சொல்வது நம்மிடம் உதவி கேட்கும் அத்தனை பேரையும் குறிக்கும். இயேசு வாழ்ந்த காலத்தில் பாகுபாடு காட்டாமல் உதவினார். அயலான் யார் எனும் உவமையில் அத்தகைய பேதங்கள் உடைக்கப்பட வேண்டும் என்றே போதித்தார். எனவே உதவும்போது பாகுபாடு, பாரபட்சம் பாராமல் உதவுவோம்.

4. செயல்கள் நம்மை மீட்புக்குத் தகுதி உடையவர்கள் ஆக்காது. ஆனால் மீட்பு நம்மை செயல்களைப் செய்பவர்களாக மாற்ற வேண்டும். செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம். மனம் திரும்பியதைக் கனிகளில் காட்டவேண்டும் என்பதே இறைவனின் அழைப்பு. வெறுமனே ஆண்டவரே, ஆண்டவரே என அழைக்காமல் தந்தையின் விருப்பப்படி செய்யவேண்டும் என்ற இயேசுவின் போதனை இங்கே மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

5. பிறருக்கு உதவும் குணம் இயல்பாகவே நம்மிடமிருந்து வரவேண்டும். யாருக்கெல்லாம் உதவி செய்கிறேன் என கணக்கு பார்க்கக் கூடாது. உதவி செய்தால் இறைவனிடமிருந்து பாராட்டு கிடைக்குமா என்பதைக் கூட நினைக்கக் கூடாது. தேவை என வருபவர்களுக்கு உதவிகளைத் தயங்காமல் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் இறைவன் வந்து கேட்கும் போது, “ஐயோ அப்படியெல்லாம் செய்தேனா ? ஞாபகம் இல்லையே” என வியப்பாய் கேட்கும் நிலை உருவாகும்.

6. இடப்பக்கம் நிற்பவர்களோ “எப்போது உம்மைக் கண்டோம், எப்போது உதவவில்லை” என்று கேட்கிறார்கள். அவர்கள் இறைவன் நேரடியாக வந்தால் உதவலாம் என நினைப்பவர்கள். அல்லது கிறிஸ்தவ முலாம் பூசப்பட்டவற்றுக்கு உதவி செய்பவர்கள். அல்லது மத ரீதியான செயல்களை முன்னிலைப்படுத்தவர்கள். அவர்களுடைய மனதில் தாங்கள் இதுவரை செய்த உதவிகளின் பட்டியல் தயாராக இருக்கும். அதனால் தான் அவர்கள் கடவுளின் கேள்வியால் ஆச்சரியப்படுகிறார்கள். “உம்மைக் காணவே இல்லையே” என அங்கலாய்க்கின்றனர். “கண்ணில் காணும் சகோதரனுக்கு அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது எனும் இயேசுவின் போதனையை அவர்கள் மறந்துவிட்டனர்.

7. இயேசு தனது பட்டியலில் பசி, தாகம், அன்னியன், உடை, நோய், சிறை என வரிசைப்படுத்துகிறார். இதில் இவற்றில் நோயுற்றிருப்பவரையும், சிறையில் இருப்பவரையும் நாம் தான் தேடிச்சென்று பார்க்க வேண்டும். நம்மைத் தேடி வராதவர்கள் கூட தேவையில் இருக்கிறார்கள் என அறிந்தால் சென்று உதவ வேண்டும். அதுவும் நிராகரிப்பின் வாசலில் இருப்பவர்களும், அவமானத்தின் நிலையில் இருப்பவர்களும் நிச்சயம் நம்மால் அரவணைக்கப்பட வேண்டும் என இயேசு வலியுறுத்துகிறார். மற்ற உவமைகளிலெல்லாம் தலைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றாத ஊழியர்களை நாம் பார்க்கிறோம். இந்த உவமையில் கட்டளையே போடாத தலைவரைப் பார்க்கிறோம். அதாவது, இவையெல்லாம் நாம் இயல்பாகவே செய்ய வேண்டும் என்பதையே இயேசு வலியுறுத்துகிறார்.

8. “அகன்று போங்கள்” என இயேசு இடப்பக்கம் நிற்பவர்களிடம் சொல்கிறார். மிகப்பெரிய துயரத்தின் நிலை இது தான். இவ்வுலகில் வாழ்கின்ற காலத்தில் நாம் இயேசுவை விட்டு அகன்று போனால், இரண்டாம் வருகையில் இயேசு நம்மிடம் “அகன்று போங்கள்” என சொல்வார். எனவே இந்த வாழ்வில் நாம் இறைவனை நாம் நெருங்கி வாழும் வாழ்க்கை வாழ வேண்டும். அதுவே நம்மை இரண்டாம் வருகையில் இறைவனை நெருங்க வைக்கும்.

9. “அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்” என இடப்பக்கம் நிற்பவர்களிடம் இறைவன் சொல்கிறார். அழியா நெருப்பை இறைவன் மனிதருக்காய் உருவாக்கவில்லை. அலகைக்காய் உருவாக்கினார். ஆனால் மனிதர்கள் இறையை விட்டு சாத்தானின் வழியில் செல்லும் போது அவர்கள் அலகையின் இடத்துக்கே சென்று சேர்கிறார்கள். நமது வாழ்க்கை இறைவனின் போதனைப்படி நடந்தால் நிலை வாழ்வை அடைகிறோம், அலகையின் வழியில் இருந்தால் அழியா நெருப்பில் சேர்கிறோம்.

10. செம்மரியாடு ஆயனை எப்போதுமே பின் தொடரும் இனம். வெள்ளாடு அப்படியல்ல, பின்னால் இருந்து ஒருவர் தள்ளிக் கொண்டே செல்ல வேண்டும். செம்மரியாடு, வாழும் போதே பிறருக்கு தனது ரோமத்தின் மூலமும் பயன்கொடுக்கும் ஆடு. வெள்ளாடு அப்படியல்ல. செம்மரியாடு கூட்டமாக இணைந்து வாழும், ஆயனின் அனுமதியின்றி எங்கும் செல்லாது. வெள்ளாடு அப்படியல்ல, வளங்களைக் கண்டால் வரிசை தாண்டி ஓடும். இப்படி ஏராளமான வேறுபாடுகள் இரண்டு இனத்துக்கும் உண்டு. எனவே தான் இறைவன் செம்மரியாடை தனது மந்தைக்கும், வெள்ளாட்டை உலகத்தின் கவர்ச்சியால் இழுக்கப்பட்டு ஓடும் மனிதருக்கும் ஒப்பிடுகிறார்.

தாலந்து உவமை

 தாலந்து உவமை

மத்தேயு 25 : 14 - 30
“விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும்⁕ கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.
இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்’ என்றார்.

ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார்.

அதற்கு அவருடைய தலைவர், ‘சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்’ என்று கூறினார்.

‘எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று அவர் கூறினார்.
=

தனது இரண்டாம் வருகையைக் குறித்தும், அதற்கு நாம் தயாராக வேண்டிய விதம் குறித்தும் இயேசு பல்வேறு உவமைகளை சீடர்களுக்குப் போதித்தார். நினையாத நேரத்தில் இறைவனின் இரண்டாம் வருகை இருக்கும். அதற்குத் தயாராக இருக்க வேண்டும், விழிப்பாக இருக்க வேண்டும் போன்றவற்றைத் தனது போதனைகளின் மையமாகக் கொண்டிருந்தார்.

தான் இந்த உலகை விட்டுப் பிரிய வேண்டிய நேரம் நெருங்கி வந்ததை இயேசு உணர்ந்திருந்தார். தனது பிரிவு சீடர்களை வலுவிழக்கச் செய்யக் கூடாது என்பதில் அவருடைய கவலை இருந்தது. ஆன்மீக வழியை விட்டு விலகி விடக் கூடாது எனும் பதட்டமும் இருந்தது. எனவே தான் சீடர்களுக்கு மீண்டும் மீண்டும் இரண்டாம் வருகையைக் குறித்து அவர் பேசினார். இரண்டாம் வருகை நிச்சயம் நடக்கும் என்பதை இவை வலியுறுத்துகின்றன.

இந்த தாலந்து உவமையும் இரண்டாம் வருகையையும், அதை எப்படி எதிர்நோக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறது.

இந்த உவமை சொல்லித் தரும் சில சிந்தனைகளைப் பார்ப்போம்.
1. நமது திறமைக்கு ஏற்ப இறைவன் தாலந்துகளைத் தருகிறார். தாலந்து என்பது திறமையல்ல, நமது திறமைக்கு ஏற்ப நமக்குத் தரப்படுகின்ற பணிகள் அல்லது பொறுப்புகள். நமது திறமைக்கு அதிகமான விஷயங்களை இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. எப்படி நம்மால் தாங்க முடியாத சோதனைகளை இறைவன் தருவதில்லையோ, அதே போல நம்மால் செய்ய முடியாத செயல்களைச் செய்ய நம்மை அவர் கட்டாயப்படுத்துவதில்லை.

2. நம்மிடம் தரப்படுபவை இறைவனின் உடமைகளே. நமக்குத் தரப்படும் எதையும் நாம் இறைவனின் பொருட்கள் எனும் சிந்தனையில் மட்டுமே அணுக வேண்டும். அப்போது தான் அதை நல்ல முறையில் பராமரிக்கவும், வளர்த்தெடுக்கவும் நமக்கு உத்வேகம் கிடைக்கும். நமது நேரம், திறமைகள், வாய்ப்புகள், பணிகள், செல்வங்கள், குடும்பம் எல்லாமே இறைவன் தந்தவை எனும் சிந்தனையில் அவற்றைப் பராமரிக்க வேண்டும்.

3. எல்லாவற்றுக்கும் இறைவன் கணக்கு கேட்பார் எனும் சிந்தனை நமக்கு இருக்க வேண்டும். அப்போது தான் இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் நமது வாழ்க்கை அமையும். எந்த ஒரு செயலைச் செய்தாலும் இதன் பயனை நான் இறைவனுக்குக் கொடுக்க முடியுமா ? என யோசிக்க வேண்டும். விண்ணகப் பயன்களா, மண்ணகப் பயன்களா எனும் கேள்வி ஒவ்வொரு செயலின் போதும் நம்மிடம் எழ வேண்டும். “விண்ணகத்தில் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்” எனும் இறைவனின் கட்டளை நம்மை இறைவனுக்கு ஏற்புடைய செயல்களைச் செய்ய உற்சாகமூட்டட்டும்.

4. நம்பிக்கைக்கு உரிய பணியாளர்களாய் நாம் இருக்க வேண்டும். அப்போது தான் இறைவன் தருகின்ற பணியை நாம் புரிந்து அதன்படி செய்ய முடியும். தலைவன் பணியாளர்களுக்கு பணம் கொடுத்த போது என்ன செய்ய வேண்டும் என சொல்லவில்லை. அவர்கள் சரியானவற்றைச் செய்வார்கள் எனும் நம்பிக்கை அவரிடம் இருந்தது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். அப்போது தான் நல்ல பணியாளர் எனும் இறைவனின் பாராட்டு கிடைக்கும். “என்னைக் காணாமலேயே விசுவசிப்பவன் பாக்கியவான்” என இயேசு சொன்னார். அதே போல, “நான் சொல்லாமலேயே என் விருப்பத்தை அறிந்து கொள்பவன் பாக்கியவான்” என்பதே அவரது சிந்தனை. இறைவன் சொல்லாமலேயே அவர் விரும்புவதை அறிந்து கொள்ள எப்போதும் இறைவனுடன் இணைந்திருப்பதும், இறைவார்த்தையோடு இணைந்திருப்பதும் அவசியமாகிறது.

5. ஐந்து தாலந்தும், இரண்டு தாலந்தும் கொண்டவர்கள் அப்படியே நூறு மடங்கு பலனைக் கொடுத்தார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப் போல !!. தலைவர் மகிழ்ச்சியடைகிறார். இறைவனுடைய மகிழ்ச்சி நம்முடைய செயல்களால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. நாம் இறைவன் விரும்பும் செயல்களைச் செய்யும் போது இறைவன் மகிழ்கிறார். அவரது மகிழ்ச்சியில் நம்மையும் இணைத்துக் கொள்கிறார். இறைவனை மகிழ்ச்சிப்படுத்தும் வாழ்க்கையே வாழ்க்கையிலேயே மிக மிக உயர்ந்த வாழ்க்கை.

6. ஒரு தாலந்து பெற்றவர் அந்த பணத்தை பயன்படுத்தவே நினைக்கவில்லை. அதை மண்ணில் புதைத்து வைத்தார். அதாவது இருளுக்குள் அதை தள்ளி விட்டார். அதை விட்டு விட்டு தன்னுடைய உலக வாழ்க்கையில் அவர் கவனம் செலுத்துகிறார். தலைவர் வந்தபோது தடுமாறுகிறார். தனது தவறை ஒத்துக் கொள்ளாமல் அதை நியாயப்படுத்த முயல்கிறார். தனது தவறுக்கு தலைவருடைய குணாதிசயத்தையே கேள்வி எழுப்புகிறார். நமது வாழ்க்கையிலும் இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழும்போது இறைவன் வந்ததும் ஓடிப் போய் கணக்கு ஒப்புவிக்கிறோம். இல்லையேல், நமது தவறை நியாயப்படுத்த ஆதாமைப் போல இறைவனையே குற்றவாளியாக்குகிறோம். அது மிகப்பெரிய பாவம்.

7. ஒரு தாலந்து பெற்றவர் அதைப் பயன்படுத்தி ஒரு வேளை படுதோல்வி அடைந்திருந்தால் கூட இறைவனின் பாராட்டைப் பெற்றிருக்கலாம். பயன்படுத்தித் தோற்றுப் போய் இறைவனிடம் சரணடைதலே பயன்படுத்தாமல் வீண் வாழ்க்கை வாழ்வதை விட மிகவும் சிறப்பானது. தலைவன் தந்த தாலந்து நீண்ட காலத்துக்குப் பின் அதன் மதிப்பையும் இழந்து விடும். இறைவன் தரும் எதையும் அவருக்குப் பிரியமான வகையில் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

8. சோம்பேறியே ! என தலைவன் பயனற்ற பணியாளனை அழைக்கிறார். சோம்பல் நமது வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடுகிறது. வளர்சிகளையெல்லாம் அது பாதிக்கிறது. உற்சாகமான, சுறுசுறுப்பான பணியாளரையே இறைவன் விரும்புகிறார். சோம்பல் தான் இறைவனுக்கு பிரியமான பணிகளைச் செய்ய விடாமல் நம்மை தடுக்கிறது. உற்சாகமாய் இருக்கும்போது நமது உடலும், உள்ளமும் பணிசெய்யும் தீவிரத்தைப் பெற்று விடுகிறது. இறைவனின் பணியைச் செய்ய வேண்டுமெனில் சோம்பேறியாய் இருக்கக் கூடாது என்பதை இறைவன் வலியுறுத்துகிறார்.

9. பொல்லாத பணியாளனே எனவும் பயனற்ற பணியாளரை அழைக்கிறார் தலைவர். குணாதிசயம் பொல்லாததாய் இருந்தால், தலைவன் இல்லாத நேரத்தில் அவர் தவறான வழிகளில் தான் செல்வார். யாரும் இல்லாத நேரத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதே நமது உண்மையான குணாதிசயம். நாம் பொல்லாதவர்களாய் இருக்கும்போது “விதைக்காத இடத்தில் அறுப்பவர்” என இறைவனை குற்றம் சாட்டுகிறோம். “அதாவது வேலை தருகிறீர்கள் அதற்கு எந்த உதவியும் செய்வதில்லை” என்றும் பொருள் கொள்ளலாம்.

10. தலைவரிடம் பணியாளர்கள் எந்த அளவுக்கு நெருக்கமாக அன்பாக நம்பிக்கையாக இருக்கிறார்கள் என்பதை வைத்தே அவர்கள் தலைவரிடமிருந்து தாலந்துகளைப் பெறுகிறார்கள். இறைவனிடம் எப்படி இருக்கிறோம் என்பது மிக முக்கியம். இறைவனும் அன்பான நம்பிக்கையான பணியாளர்களையே விரும்புகிறார். அச்சத்தினாலோ, கட்டாயத்தினாலோ பணி செய்பவர்களை அவர் விரும்புவதில்லை. அத்தகைய பயனற்ற பணியாளர்கள் அழிவை சந்திக்கின்றனர்.
இந்த சிந்தனைகளை நாம் பெற்றுக் கொள்வோம். இறைவனை எதிர்கொள்ள அவருக்குப் பிரியமான செயல்களை மட்டுமே தினமும் செய்வோம் என முடிவெடுப்போம்.

பத்து கன்னியர்

 பத்து கன்னியர்

மத்தேயு 25 : 1 - 13 

“அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.

முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.

அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.

அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள்.

அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

=====

இயேசு சொன்ன இந்த பத்து கன்னியர் உவமை மிகவும் பிரபலம். எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும், விசுவாசத்தைக் காத்துக் கொள்ள வேண்டும், எல்லாவற்றுக்கும் இறைவனையே பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த இயேசு இந்த உவமையைச் சொல்கிறார். இயேசு இரண்டாம் வருகை குறித்து ஐந்து முக்கியமான உவமைகளைச் சொன்னார், அவற்றில் இந்த உவமை குறிப்பிடத்தக்கது !

மணமகனை வரவேற்க தோழிகள் செல்கின்றனர். மணமகனின் வருகையோ தாமதமாகிறது. தோழியர் தூங்கி விடுகின்றனர். பின்னர் நள்ளிரவில் விழிக்கின்றனர். ஆயத்தமாய் விளக்குகளும் எண்ணையும் வைத்திருப்பவர்கள் மணமகனை சென்றடைகின்றனர். எண்ணை இல்லாத விளக்குகளோடு இருந்தவர்கள் மணமகனை சென்றடையும் வாய்ப்பை இழக்கின்றனர்.

இந்த உவமை பல சிந்தனைகளை நமக்குள் விதைக்கிறது.

1. அலட்சியம் ! இறைவனின் வருகையை எதிர்நோக்கி இருக்கும் நாம் விலக்க வேண்டிய முதல் விஷயம் அலட்சியம். மணமகனை எதிர்கொள்ளச் சென்ற அறிவிலிகள் அலட்சியமாய் இருந்தனர். செல்வது இரவில் என்பது தெரியும். தாமதமானால் விளக்கு எரியாது என்பது தெரியும். எண்ணை இல்லாவிட்டால் சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்பதும் தெரியும். ஆனாலும் அலட்சியமாய் இருந்தனர். விளக்கு அணையும் முன் மணமகனைச் சந்திப்போம் என நினைத்துக் கொண்டனர். தாமதம் நிகழ்ந்தபோதோ அலட்சியத்தினாலேயே அழிந்தனர்.

2. எண்ணை என்பது நமது உள்ளார்ந்த மாற்றமும், இதயத்தில் இருக்கும் தூய ஆவியானவரின் பிரசன்னமும். வெளியிலிருந்து விளக்கைப் பார்த்து எண்ணை இருக்கிறதா என்பதை அறிய முடியாது. ஆனால் வெளிச்சத்தைப் பார்த்து அறிய முடியும். எண்ணை இல்லாத விளக்கு கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டுக்குள் விழும். எண்ணை இருக்கும் விளக்கோ இருட்டை விரட்டிக் கொண்டே இருக்கும். நமது இதயத்தில் எப்போதும் தூய ஆவியானவர் இருக்க வேண்டும். அப்போது தான் இருட்டு நம்மை விழுங்கிவிடாமல் நாம் ஒளியாய் இருக்க முடியும்.

3. பத்து கன்னியரும் வெளிப்பார்வைக்கு ஒரே மாதிரி இருந்தார்கள். பத்து பேருமே கன்னியர் என்பது அவர்கள் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்பதன் குறியீடு. பத்து பேருமே அழைக்கப்பட்டவர்கள். பத்து பேருமே அழைப்பை ஏற்றுக் கொண்டவர்கள். பத்து பேருமே விளக்கைக் கொண்டு சென்றவர்கள். பத்து பேருமே மணமகனை காண ஆவல் கொண்டவர்கள். சுருக்கமாய் சொன்னால், இறைவனைத் தவிர யார் பார்த்தாலும் பத்து பேருக்குமிடையே எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால் இறைவன் உள்ளத்தைப் பார்ப்பவர். அவர் மனிதனின் மனம் மாற்றமடைந்திருக்கிறதா, தூய ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறாரா என்பதை சட்டெனக் கண்டுகொள்வார். மனிதரை ஏமாற்றலாம், ஆனால் இறைவனை ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து போவது நாம் தான்.

4. மணமகன் வரத் தாமதம் ஆகும்போது பத்து பேருமே தூங்கி விடுகின்றனர். தூக்கம் என்பது எல்லோருக்கும் வரக் கூடிய சோர்வு. ஆன்மீக வாழ்வின் சோர்வுகள், தடுமாற்றங்கள் இயல்பாக நடக்கக் கூடியது. ஆனால் விழித்தெழுந்து சட்டென தங்கள் வாழ்க்கையைச் சீர்செய்யவும், விளக்கை ஒளிர வைக்கவும் வேண்டுமெனில் எப்போதும் தூய ஆவியானவருடன் நடக்க வேண்டியது அவசியம். தற்காலிகச் சோர்வுகளைப் பற்றிய கவலை தேவையில்லை, நிலையில்லா வாழ்வுக்கான விழிப்பு நம்மிடம் இருந்தால் போதும்.

5. பிறர் விளக்கில் இருக்கும் எண்ணையோ, பிறர் விளக்கில் இருக்கும் வெளிச்சமோ நம்மை இறைவனிடம் கொண்டு சென்று சேர்க்காது. நமக்கே நமக்கான ஒளியும், நம்முடைய வாழ்வில் செய்யும் செயல்களும், அந்த செயல்களை வழிநடத்தும் தூய ஆவியானவரும் மிகவும் அவசியம். எவ்வளவு தான் ஆன்மீக வெளிச்சம் அதிகம் உடைய நபராய் இருந்தால் கூட இந்த விஷயத்தில் நமக்கு உதவ முடியாது ! அவர்கள் செய்கின்ற எச்சரிக்கை ஒலிகளை கேட்டு நம் வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ளலாம். அதுவும், கடைசி வரை அலட்சியமாய் இருந்தால் பயனளிப்பதில்லை.

6. நம்முடைய பெற்றோரோ, நண்பர்களோ, சகோதர சகோதரிகளோ தூய வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதற்காக, நமக்கு விண்ணகம் செல்ல ஸ்பெஷல் டிக்கெட் கிடைப்பதில்லை. அவர்கள் நமக்காக செபிக்கலாம், ஆனால் மனமாற்றமும் இறை நம்பிக்கையும் நம்மில் தான் வளர வேண்டும். பிறர் நீரூற்றலாம், ஆனால் விதைகள் நம்மிடம் இருக்க வேண்டும். இல்லையேல் முளைகள் வருவதில்லை.

7. தூக்கம் என்பதை மரணம் என்றும் சொல்லலாம். மரணத்தின் முன் நாம் நமது வாழ்க்கை எனும் விளக்குகளை ஏந்தி வருகிறோம். மரணத்துக்குப் பின் நம்மிடம் இருக்கும் விளக்கின் தன்மைக்கு ஏற்ப, அதன் ஒளியின் தன்மைக்கு ஏற்ப நமக்கு நியாயத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இறுதித் தீர்ப்பில் நாம் வெற்றியடைய வேண்டுமெனில் நமது வாழ்க்கை மரணத்துக்கு முன் மிகவும் ஒளியுடையதாக, எண்ணை நிறைந்ததாக இருக்க வேண்டும். நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் மரணத்துக்குப் பின் பரிகாரம் காண முடியாது.

8. விளக்கில் இருக்கும் வெளிச்சம் இரண்டு பணிகளைச் செய்கிறது. ஒளியை இறை வார்த்தை என விவிலியம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. அந்த இறைவார்த்தை நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது. இறைவார்த்தையை நமக்கு சரியாக விளக்குபவராக தூய ஆவியானவர் இருக்கிறார். அதே போல, இறைவார்த்தையின் வெளிச்சம் நம்மை இயேசுவுக்கும் அடையாளம் காட்டுகிறது. இருட்டில் நிற்கும் நபரை மணமகன் அடையாளம் காண்பதில்லை. ஆனால் விளக்கின் வெளிச்சம் முகத்தில் தெரிந்தால் அவர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அழைத்துக் கொள்வார். நீங்கள் உலகின் ஒளி என்கிறார் இயேசு, அந்த ஒளி ஒளிரவேண்டுமெனில் தூய ஆவியானவர் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம்.

9. ஐந்து அறிவிலிகளும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தான். அவர்களுடைய விளக்கும் முன்பு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் அணையத் துவங்கியிருந்தது. “அணைந்து கொண்டிருந்தது” என்கிறது விவிலியம். எனவே நமது ஆன்மீக வாழ்க்கையில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளிச்சம் குறைவதை உணர்ந்தால் உடனடியாக அதை நீக்கும் வழிகளை பின்பற்ற வேண்டும். இறைவனையும், தூய ஆவியானவரையும் அணுக வேண்டும். நள்ளிரவில் எண்ணை கிடைக்காது, இறுதி காலத்தில் நமது வாழ்க்கையை சரி செய்ய முடியாது என்பதை உணர வேண்டும்.

10. கதவு அடைக்கப்படும். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அது நமது மரணமாகவோ, உலகின் முடிவாகவோ, வருகையாகவோ இருக்கலாம். நோவாவின் பேழையை மூடிய இறைவன் அதை புதிய உலகில் தான் திறக்கிறார். நமது வாழ்க்கை இறைவனின் வீட்டுக் கதவு வரை வருவதல்ல. எட்ட இருந்து எட்டிப் பார்ப்பதல்ல. இறைவனுடைய வீட்டுக்குள் நுழைவது. அதற்கான வாழ்க்கையை நாம் வாழவேண்டும். கதவு மூடிவிட்டால், அதன்பின் ஆண்டவரே ஆண்டவரே என அழைத்தாலும் பயனில்லை.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.

நம்பிக்கைக்குரிய பணியாளர்.

 நம்பிக்கைக்குரிய பணியாளர்.

மத்தேயு 24 : 45 - 51 

த‌ம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரிய வரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன் பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.

விளக்கம்:

இரண்டாம் வருகையைக் குறித்த உவமையாக இயேசு இதைக் குறிப்பிடுகிறார். இறுதியில் இயேசு மீண்டும் பூமிக்கு வருவார் என்பதும், பின்னர் நியாயத் தீர்ப்பு அப்போது நிகழும் என்பது இயேசுவின் வாக்குறுதிகளில் ஒன்று. அதைக்குறித்த உவமையாக இயேசு பல உவமைகளைச் சொல்கிறார் அதில் ஒன்று இந்த உவமை.

இறைவன் எப்போது வருவார் என்பதைப் பற்றி சிந்திக்காமல், எப்போது வந்தாலும் இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே இந்த உவமை சொல்லும் அடிநாதமாகும்.

இந்த உவமை பல்வேறு நுணுக்கமான விஷயங்களை நமக்கு கற்றுத் தருகிறது.

1. ஒரு பணியாளனுக்கு, தலைவன் எப்போது திரும்ப வருவார் என்பதை அறிய வேண்டிய அவசியம் இல்லை. ஏன் அதை அறிகின்ற‌ உரிமை கூட அவனுக்கு இல்லை. அவரது பணி தலைவன் இட்ட செயலை செய்து கொண்டிருப்பது மட்டும் தான். அதைத் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்க வேண்டுமே தவிர, தலைவர் எப்போது வருவார் என்பதைக் குறித்த சிந்தனையே எழக் கூடாது.

2. நமது வாழ்க்கையில் நமது இலக்கு, இறைவன் பார்வையில் “நம்பிக்கைக்குரியவரும், அறிவாளியுமான” பணியாளராய் இருப்பதே. அதற்கு இயேசு இரண்டு நிபந்தனைகளைக் கொடுக்கிறார். ஒன்று, தலைவன் தந்த வேலையைச் செய்ய‌ வேண்டும். இரண்டு, அதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுவே நமக்கான அழைப்பு. இறைவன் தந்த பணியை செய்வது, அதைத் தொடர்ந்து செய்வது !

3. சிறிய இவ்வுலகப் பணியில் உண்மையாய் இருக்கும்போது நமக்கு நிலைவாழ்வு எனும் மிகப்பெரிய செல்வம் கிடைக்கிறது. மிகப்பெரிய பணிகள் நமக்கு தரப்படும். மிகப்பெரிய உயர்வு நமக்குக் கிடைக்கும். தலைவன் இட்ட பணியை கொஞ்ச நாள் செய்து விட்டு பின்னர் பின்வாங்கிவிடுபவர்களுக்கு இறைவனின் நிலைவாழ்வு கிடைப்பதில்லை. பின்வாங்குதல் என்பது விசுவாசக் குறைவே. அது பாவம் என்கிறது பைபிள்.

4. தலைவனின் வருகை தாமதமாகும் என ஊழியன் மனதில் கருதிக் கொள்வது தான், அவனுடைய வீழ்ச்சிக்கு முதல் சுவடாய் அமைகிறது. அது தான் அவனுடைய பொல்லாத குணத்தை வெளியே கொண்டு வருகிறது. இயேசுவின் வருகை தாமதமாகும் என கிறிஸ்தவன் சிந்திக்கத் துவங்கும் போது அவனுடைய வீழ்ச்சியும் துவங்குகிறது. எனவே இறைவனின் வருகை எப்போது நிகழும் எனும் சிந்தனையே இல்லாமல் எப்போதுமே தயாராய் இருக்கவேண்டும்.

5. வருகை தாமதமாகும் என எண்ணும்போது முதலில் ஊழியனுடைய மனித நேயம் காணாமல் போகிறது. அவனுடைய உண்மையான சுயரூபம் வெளியே வருகிறது. வெளிவேடம் கலைகிறது. ஊழியனுக்கு உணவு கொடுக்க வேண்டும் எனும் தனது பணியிலிருந்து தவறுகிறான். ஊழியனை அவமரியாதை செய்கிறான். வன்முறை சிந்தனைகள் தலை தூக்குகின்றன. தலைவனின் ஊழியனை அடிக்கவும் செய்கிறான். எனவே இயேசுவின் வருகை தாமதமாகும் எனும் சிந்தனை நமது உள்ளத்தை ஆக்கிரமிக்காமல் காத்துக் கொள்ள வேண்டும்.

6. வருகை தாமதமாகும் என ஊழியன் நினைக்கும் போது அவனுடைய சுயநல சிற்றின்பத் தேவைகள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன. தனது தலைவர் தனக்கு இட்ட பணி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுகிறது. குடிகாரர்களோடு சேர்ந்து உண்ணவும் குடிக்கவும் ஆரம்பிக்கிறார். இயேசுவின் வருகை தாமதமாகும் என நாம் இறுமாந்திருந்தால் நமது சிந்தனைகளிலும் இறைவனின் பணியை விட சுய விருப்பங்களே நிரம்பி வழியும்.

7. தாமதம் என்பது இறைவன் வைக்கின்ற சோதனை. நாம் இறைவன் மீது எந்த அளவு அன்பு வைத்திருக்கிறோம், எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை இறைவன் அதன் மூலம் அளவிடுகிறார். மோசே மலையில் ஏறி கட்டளைகளை வாங்கச் சென்றபோது மக்கள் கீழே நாற்பது இரவும் நாற்பது பகலும் காத்திருந்தார்கள். மோசே வர “தாமதம்” நிகழ்ந்தபோது தங்கள் பார்வையைக் கடவுளை விட்டு விலக்கினார்கள். அது அவர்களுடைய அழிவுக்குக் காரணமானது ! சாமுவேலுக்காகக் காத்திருந்த சவுல், அவர் காலம் தாழ்த்தியதால் சாமுவேல் செய்யவேண்டிய பலியைச் செலுத்தி அழிவை வரவழைக்கிறார். இறைவன் நமது பொறுமையை விரும்புகிறார். அது அவர்மீதான நமது அன்புக்கும், நம்பிக்கைக்குமான அடையாளம்.

8. தலைவனின் வருகை நிச்சயமானது ! இயேசுவின் வருகையும் அவ்வாறே. இயேசு எல்லா உவமைகளிலும் திரும்பத் திரும்ப இதை வலியுறுத்துகிறார். வருகை என்பது சர்வ நிச்சயம் ! அப்படி இறைவன் வரும்போது ஓடிப் போய் அன்போடு தழுவிக் கொள்பவர்களாக நாம் இருக்க வேண்டும். ஐயையோ.. நான் தயாராய் இல்லையே என தடுமாறக் கூடாது. எவ்வளவு தாமதமாய் வந்தாலும் ஓடிப் போய் தழுவிக் கொள்கிறார் கெட்ட குமாரனின் தந்தை. அது தந்தையின் அன்புக்கு உதாரணம். தடுமாறினாலும் உடனே தந்தையிடம் ஓடோடி வருவதில் இருக்கிறது தந்தை மீதான நமது அன்பு.

9. தலைவன் ஊழியனுக்கு கொடுத்த பணி, தனது பணியாளர்களுக்கு “வேளா வேளைக்கு” உணவு கொடுப்பது. அப்படி உணவு கொடுப்பதை ஊர்ஜிதப்படுத்துவது அந்தப் பணியாளர்களின் உடல் வலிமையும், வளர்ச்சியுமே. தொடர்ச்சியான ஆரோக்கியமான உணவு தான் ஊழியர்களை வலுவாக்கும். ஆளுக்கு ஏற்றபடி அந்த உணவு வழங்கப்படலாம். நற்செய்தியையும் நாம் தொடர்ந்து அறிவிப்பவர்களாகவும், சரியான நேரத்தில் அறிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

10. தலைவன் வரும்போது பொல்லாத ஊழியனின் வெளிவேடம் கலைந்து விடும். அவனை அவர் இறைவார்த்தையால் வெட்டுகிறார். கிருபையின் படியும், வார்த்தையின் படியும் அவனுடைய அழிவு அமையும். எதிலும் அவனுக்கு மீட்பு இல்லை. அவனுடைய இடம் வெளிவேடக்காரருக்கு உரிய இடத்தில் அமைந்து விடும். அங்கே அழுகைக்கும், அங்காலாய்புக்கும் மட்டுமே இடம் உண்டு.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

அத்தி மர உவமை

 அத்தி மர உவமை

மத்தேயு 24 : 32-36

அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும் போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. “அந்த நாளையும் வேளையையும்பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது

விளக்கம்

இயேசு தனது இரண்டாம் வருகையைப் பற்றி இந்த உவமையை கூறுகிறார். இயேசுவின் இரண்டாம் வருகை எப்படி நடக்கும் என்பதையும், அப்போது என்னென்ன நிகழும் என்பதையும் பற்றி மிக விளக்கமாக மத்தேயு 24ம் அதிகாரம் நமக்கு எடுத்துக் கூறுகிறது.

போலித் தீர்க்கத்தரிசிகள் எழுவார்கள், நானே மெசியா என சொல்லி உங்களை தடம் மாறச் செய்யும் தலைவர்கள் வருவார்கள், அரசுகள் அரசுகளோடு போரிடும், பஞ்சமும் நிலநடுக்கமும் உண்டாகும், மக்கள் நம்பிக்கை இழப்பர், மனித நேயம் மறையும், அன்பு மக்களிடமிருந்து அகலும் என்றெல்லாம் வருகையின் அறிகுறிகளை இயேசு விளக்கினார்.

இரண்டாம் வருகை நிகழும் போது இறைமகன் இயேசு மேகங்கள் மீது வருவார், கதிரவன் இருளும், நிலா ஒளிதராது, விண்மீன்கள் வானிலிருந்து விழும், கிழக்கு முதல் மேற்கு வரை மின்னல் போல் வருகை நிகழும், இறைமகன் வந்து தனது தூதரை அனுப்பி தேர்ந்து கொள்ளப்பட்டவரை கூட்டிச் சேர்ப்பார் என வருகை எப்படி நிகழும் என்பதை இயேசு கூறினார். அதன்பின் இந்த அத்திமர உவமையை இயேசு சொன்னார்.

உலகின் முடிவு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். உலக நிகழ்வுகள் பல நமக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கின்றன. இயேசு கதவினருகே வந்து விட்டார் என சொல்லும் போது சிரிக்கும் மக்கள் தான் அதிகம். ஆனால் ஒளி ஒருநாள் வெளிப்படும்போது, இருள் ஒளிந்து கொள்ள முடியாது.

இந்த உவமை சில சிந்தனைகளை நமக்குள் விதைக்கிறது.

1. அத்திமரம் துளிர் விடும் நிகழ்வை ஒரு அடையாளமாய் இயேசு சொல்கிறார். பருவங்களை தாவரங்களின் இலை மாற்றங்கள் காட்டி விடுவது போல, இறைவனின் இரண்டாம் வருகையை பல மாற்றங்கள் காட்டி விடும் என்பதை இயேசு சொல்கிறார். மாற்றங்கள் நம்மை பயமுறுத்துவதற்கானவை அல்ல, அடுத்து நிகழப்போவதை எதிர்நோக்குவதற்காகவே.

2. இயேசுவின் முதல் வருகையின் மீது எந்த அளவுக்கு நாம் விசுவாசம் கொள்கிறோமோ அந்த அளவுக்கு இரண்டாம் வருகையை நாம் விசுவசிப்போம் என்பது ஒரு எளிய ஒப்பீடு. இறைமகன் இயேசு நமக்காகப் பிறந்தார், வாழ்ந்து காட்டினார், மீட்பின் வழிகளைப் போதித்தார். அவரில் விசுவாசம் கொள்ளும் போது நாம் இறப்பினும் வாழ்வோம் எனும் நம்பிக்கை இயேசுவின் முதல் வருகையின் மீதான நம்பிக்கை. அது இருந்தால் இரண்டாம் வருகையின் மீது நம்பிக்கை தானாகவே உருவாகிவிடும்.

3. இயேசுவின் முதல் வருகையை நம்புபவர்கள் அவருடைய போதனைகளை நம்புவார்கள் அதன்படி வாழ்வார்கள், இயேசுவின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொள்வார்கள் அதன்படி வாழ்வார்கள். இயேசுவே மீட்பர் என உணர்ந்து கொள்வார்கள் அவரில் சரணடைவார்கள். அத்தகைய வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இரண்டாம் வருகை எப்போது நடந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடையதாகவே அமையும்.

4. இரண்டாம் வருகையின் நேரம் எப்போது என்பது யாருக்குமே தெரியாது. இறைமகன் இயேசுவுக்கே அது தெரிவிக்கப்படவில்லை என்பது அந்த நாள் சட்டென வரும் என்பதை விளக்குகிறது. நினையாத நேரத்தில் வருகின்ற திருடனைப் போலவோ, எதிர்பாரா நேரத்தில் வீட்டுக்குத் திரும்பிய தூரதேசம் சென்ற தலைவனைப் போலவோ, தாமதமாய் வரும் மணவாளனைப் போலவோ அந்த நாள் இருக்கும் என இயேசு பல உவமைகளின் வாயிலாக நமக்கு விளக்குகிறார். எனவே எப்போதும் தயாராய் இருக்க வேண்டியது அவசியம்.

5. எப்போது வருவார் என்பது தான் நமக்குத் தெரியாதே தவிர, எப்படி வருவார் என்பதை விவிலியம் தெள்ளத் தெளிவாக நமக்கு விளக்குகிறது. இயேசு மிகத் தெளிவாகச் சொன்ன விஷயங்களை நாம் நம்பாமல் போனால், அது இயேசுவின் மீது நமக்கு விசுவாசம் இல்லை என்பதன் வெளிப்பாடே. “ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்” என்கிறார் இயேசு. முதலில் நம்பி, பின்னர் வருகை தாமதமாகும்போது விலகிச் செல்பவர்கள் மீட்பை விட்டு விலகிவிடுவார்கள்.

6. நான் தயாராய் இருக்கும்போது இரண்டாம் வருகை நடக்க வேண்டும் ! என்பது தவறு.

இரண்டாம் வருகையின் போது நான் தயாராய் இருப்பேன் என்பது சரி. இப்போதே, இந்த கணமே நாம் இறைவனுடைய வருகையை மனதில் கொண்டு நமது வாழ்க்கையை நீதிக்கு நேராக அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

7. இரண்டாம் வருகை அச்சத்துடன் பார்க்க வேண்டிய விஷயம் அல்ல, அது ஆனந்தத்துடன் எதிர்நோக்க வேண்டிய விஷயம். ஒரு விருந்துக்கு செல்லும்போது இருக்கின்ற பரவசம் இருக்க வேண்டும். ஒரு பரிசு வாங்கப் போகும்போது சிறுவனுக்கு இருக்கின்ற குதூகலம் இருக்கவேண்டும். அப்படி இருக்க வேண்டுமெனில் நாம் இரண்டாம் வருகைக்குத் தயாராய் இருக்கவேண்டும்.

8. கடைசியில் பார்த்துக் கொள்ளலாம். இவ்வுலக வாழ்க்கையை ஆண்டு அனுபவித்துவிட்டு கடைசியில் இறைவனை நாடலாம் என பலர் நினைப்பதுண்டு. முடிவு என்பது இறைவன் கையில். அது சொல்லிக் கொண்டு வருவதில்லை. அவர் அழைக்கும் கணமே தெரியாதிருக்கும்போது, கடைசிக் காலத்தில் மாறுவேன் என நினைத்துக் கொள்வது நம்மை நாமே வஞ்சிப்பதற்கு சமம். கடைசி என்பது இந்தக் கணம் எனும் நினைப்பு இருப்பதே ஆரோக்கியமான ஆன்மீக வாழ்வுக்கு அடிப்படை.

9. இறைவார்த்தை எப்போதுமே அழியாது. வானமும், பூமியும் அழியலாம். ஆனால் இறைவார்த்தைகள் அழியாது. எத்தனையோ தலைமுறைகள் கடந்தபின்னும் இறைவார்த்தை நிலைக்கிறது. அது மக்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களுடைய வாழ்வில் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த இறைவார்த்தை நம்மை மாற்றத்துக்காக தயாராக்கும் வார்த்தை. இரண்டாம் வருகைக்குத் தயாராக ஒரே வழி, இறைவார்த்தையை இறுக்கமாய்ப் பற்றிக் கொள்வது மட்டுமே. “உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” என எச்சரிக்கை விடுக்கிறார் இயேசு. இறைவார்த்தைகளை மட்டுமே பற்றிக் கொண்டால் நம்மை யாரும் நெறிதவறச் செய்ய முடியாது என்பதை உணர்வோம்.

10. நோவாவிடம் இறைவன் பேழை செய்யச் சொன்னார். மழை என்றால் என்ன என்பதை பூமி அப்போது அறிந்திருக்கவில்லை. நோவா கடற்கரையில் பேழையைச் செய்யவில்லை, வெட்ட வெளியில் செய்தார். உலகமே நகைத்திருக்கும். நோவாவோ இறைவனின் வார்த்தையை நம்பினார். இறைவார்த்தை நிகழும் என விசுவாசித்தார். நோவாவின் பேழை நோவாவைக் காக்கவில்லை, அவர் கடவுள் மீது வைத்த நம்பிக்கை அவரைக் காத்தது. பேழையின் கதவை மூடி நோவாவை கடவுள் பத்திரமாய் பாதுகாத்தார். கடவுளின் வார்த்தையை அப்படியே கடைபிடித்தார் நோவா, எனவே பெருமழை அவரை தொடவில்லை. கடவுளின் வார்த்தைக்கு நாமும் முழுமையாய்க் கீழ்ப்படிந்தால் இரண்டாம் வருகை நம்மை அழிக்காது, மீட்டு புது உலகுக்கு இட்டுச் செல்லும்.

இந்த சிந்தனைகளை பெற்றுக் கொள்வோம்.