அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, October 16, 2024

எஸ்தர்

 எஸ்தர் (Esther, /[invalid input: 'icon']ˈɛstər/; எபிரேயம்: אֶסְתֵּר‎), இயற்பெயர் அதசா (Hadassah), என்பவர் விவிலிய நூல்களில் ஒன்றாகிய எஸ்தர் நூலில் காவியத்தலைவி ஆவார். விவிலியத்தின்படி, இவர் ஒரு யூதப் பெண்ணும் பாராசீக பேரரசர் அகஸ்வேரின் பட்டத்து அரசியும் ஆவார். பேரரசர் அகஸ்வேர் அகாமனிசியப் பேரரசின் பேரரசன் சைரசு என மரபுப்படி அடையாளம் காணப்பட்டுள்ளார். எஸ்தரின் கதை பூரிம் என்ற யூதப் பெருவிழாவின் அடைப்படையாக அமைந்துள்ளது.

மன்னன் அகஸ்வேர் முன்செல்ல எஸ்தருக்கு ஒப்பனை செய்யப்படுகிறது (எஸ் 2:15-18). ஓவியர்: ஏட்வின் லாங். ஆண்டு: 1878. காப்பிடம்: விக்டோரியா தேசிய படக்காட்சியகம், மெல்பேர்ண்.


எஸ்தர் நூலின் பெயரும் கருப்பொருளும்
இந்நூலில் வருகின்ற கதைத் தலைவியின் பெயர் எஸ்தர். எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் யூதப் பெண் (எஸ் 2:7). அவரை மையமாகக் கொண்டு அமைந்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் பாரசீகப் பேரரசர் அகஸ்வேரின் குளிர்கால அரண்மனையில் நடைபெற்றவை.
யூதப் பெண்ணாகிய எஸ்தர் தம் மக்கள்பால் பேரன்பு கொண்டிருந்தார். அம்மக்களை அழிக்க எதிரிகள் திட்டமிட்டபோது எஸ்தர் மிகுந்த துணிவுடன் செயல்பட்டதை இந்நூல் விளக்குகிறது.

பூரிம் என்ற யூதப் பெருவிழாவின் பொருளும் அதன் பின்னணியும் இந்நூலில் எடுத்துக் கூறப்படுகின்றன.

இறைவாக்கினர் பாரூக்கு

 இறைவாக்கினர் பாரூக்கு (எபிரேயம்: ברוך בן נריה " பேறுபெற்றவர் ") என்பவர் கி.மு. 6ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றான பாரூக் நூலின் ஆசிரியர் இவர் ஆவார். இந்த நூல் விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) அதிகாரப்பூர்வமாக இறையேவுதல் பெற்ற நூலாக ஏற்கப்பட்டது.

பாரூக்கு இறைவாக்கினர். விவிலிய படிம ஓவியம். காலம்: 17ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: உருசியா.


பெயர்
பாரூக்கு என்னும் இந்நூல் செப்துவசிந்தா பதிப்பில் கிரேக்க மூல மொழியில் Barùch (Βαρούχ) என்றும் இலத்தீனில் Baruch என்றும் உள்ளது. எபிரேயத்தில் இது בָּרוּךְ (Barukh, Bārûḵ) என்னும் பெயர் ஆகும். இதற்கு "பேறுபெற்றவர்" என்பது பொருள்.

வரலாற்றுச் சுருக்கம்
இவர் இறைவாக்கினர் எரேமியாவின் செயலர் என்பது மரபு வழிச் செய்தி. எரேமியா நூலின் படி இவரின் தந்தை நேரியா ஆவார். அதே நூலில் யூதாவின் அரசனான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கினை எரேமியா சொல்லச் சொல்ல பாரூக்கு அவற்றை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவைத்து, எரேமியாவின் கட்டளைக்கிணங்க நோன்பு நாளன்று, யூதர்களின் கோவிலுக்கு சென்று அங்குக் குழுமியிருந்த மக்களின் செவிகளில் விழும்படி, தான் எழுதிவைத்த ஆண்டவரின் சொற்களை ஏட்டுச்சுருளினின்று படித்துக்காட்டினார். இக்காரியம் செய்ய மிகக்கடினமானதாக இருப்பினும், இதனை மனம்தலராமல் பாரூக்கு செய்துமுடித்தார்.

இவரும் எரேமியாவும் பாபிலோனிய மன்னன் எருசலேமின் மீது படையெடுத்து அதன் அரசனையும் நாட்டினரையும் நாடு கடத்தியதை தம் கண்களால் கண்டனர். கடவுளையும் அவரது திருச்சட்டத்தையும் கைவிட்டமையே இஸ்ரயேலர் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டதற்குரிய காரணம்; எனவே அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுக் கடவுள்பால் மனந்திரும்பி, உண்மை ஞானமாகிய திருச் சட்டத்தைக் கடைப்பிடித்து நடந்தால், கடவுள் அவர்களது அடிமைத்தனத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களுக்கு மீட்பை அருள்வார் என்னும் செய்தியை இவரின் நூல் வலியுறுத்துகிறது. வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட ஐந்து சிறிய தனித்தனிப் பகுதிகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, கி.மு.முதல் நூற்றாண்டில் தனி நூலாகப் பாரூக்கின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளன என சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேற்கோள்கள்
  •  கார்த்தேசு சங்கம்
  •  திரெந்து பொதுச் சங்கம்
  •  எரேமியா 36:4
  •  எரேமியா 36 அதிகாரம்

யோபு

 யோபு (ஆங்கில மொழி: Job; /ˈdʒoʊb/; எபிரேயம்: אִיּוֹב‎ /[invalid input: 'ʾIyyôḇ']/) என்பவர் கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் யோபு நூலின் நாயகன் ஆவார். விவிலியத்தில் இவரைப்பற்றியக் குறிப்புகள் யோபு நூலுக்கு வெளியே எசேக்கியேல் நூலிலும், யாக்கோபு நூலிலும் காணக்கிடைக்கின்றது. இவர் நபி என திருக்குர்ஆனிலும் குறிக்கப்பட்டிருகின்றார்.
யோபு
யோபுவின் ஏழ்மை நிலையைக் காட்டும் சித்திரம்
நீதிமான்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
செல்வாக்குக்கு உட்பட்டோர்பலர்
யூதர், கிறித்தவர், இசுலாமியர்

பெயர்
யோபு என்னும் பெயர் மூல எபிரேயத்தில் אִיּוֹב‎ என்று அழைக்கப்படுகிறது. இலத்தீனில் Job/Iob என்று உள்ளது. இப்பெயரின் பொருள் வெறுக்கப்படுபவர் அல்லது வதைக்கப்படுபவர் என்பதாகும்.

வரலாற்று சுறுக்கம்
முக்காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக யோபு என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் யோபைச் சோதித்தான். இதனால் யோபு தனது மக்களையும், சொத்து சுகத்தையும், உடல் நலத்தையும் ஒவ்வொன்றாக இழந்தார். இருப்பினும் அவர் கடவுளைத்தூற்ற வில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்து வந்தார். அவர் மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றார்.

பழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு. இவ்வாறு 'நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்?' என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம் போல் அமைந்துள்ளது இவரின் வாழ்வை சித்தரிக்கும் விவிலியத்தில் இடம் பெறும் யோபு நூல்.

யோபு தன் மனைவியோடு வாக்குவாதம் செய்தல்





தனது மூன்று மகள்களோடு யோபு ஓவியர்: வில்லியம் பிளேக்



யோபு சோதிக்கப்படல், வில்லியம் பிளேக்

ஆகாய்

 ஆகாய் (ஆங்கில மொழி: Haggai; /ˈhæɡaɪ/; எபிரேயம்: חַגַּי‎, Ḥaggay or Hag-i, கிரேக்கம்: Ἀγγαῖος; இலத்தீன்: Aggaeus) என்பவர் கி.மு.6ஆம் நூற்றாண்டில் யூத மக்களிடையே வாழ்ந்த இறைவாக்கினர் ஆவார். பாபிலோனிய அடிமைத்தனத்தினின்று சொந்த நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள், எருசலேம் கோவிலை மீண்டும் கட்டியெழுப்புமாறு இவரது இறைவாக்குகள் தூண்டின. மக்களுக்குச் செழுமையையும் அமைதியையும் அருள்வதாக இவர் வழியாக கடவுள் வாக்களித்ததை ஆகாய் நூல் எடுத்துரைக்கிறது.

பெயர் விளக்கம்
ஆகாய் என்ற பெயருக்கு விழாக் கொண்டாட்டம் அல்லது திருப்பயணம் செய்பவர் என்பது பொருள். ஆகாய் கூடாரத் திருவிழாவன்று பிறந்ததால், அவருக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் சிலரின் கருத்து. ஆனால் அக்காலத்தில் ‘ஆகாய்' என்பது ஒரு பொதுவான பெயராகவே இருந்துள்ளது.

வரலாற்று பின்னணி
கி.மு.587ல் நெபுகத்நேசர் படைகள் எருசலேம் கோவிலைத் தரைமட்டமாக்கின. பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்கள், அரசர் சைரசின் ஆணைப்படி கி.மு.538ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்கள். அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் நாடாகிய இஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் திரும்பினார்கள். அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பியபோது, நெபுகத்நேசர் எருசலேமிலிருந்து அபகரித்துக் கொண்டு வந்திருந்த பொருட்களை அரசர் சைரஸ், அவர்களிடம் கொடுத்து அனுப்பினார். எருசலேம் திரும்பிய யூதர்கள், முதலில் கோவிலைக் கட்ட திட்டமிட்டு, அதற்கு அடித்தளமும் இட்டனர். ஆனால் அடுத்த 18 ஆண்டுகளாக கட்டட வேலை எதுவும் நடைபெறாமலே இருந்தது.

ஆகாய் இறைவாக்கினர். உருசிய படிம ஓவியம். உருவாக்கப்பட்ட காலம்: 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. காப்பிடம்: கிசி துறவியர் இல்லம், வடக்கு உருசியா.

இறைவாக்குப் பணி
இந்நிலையில், கி.மு.520 ஆகஸ்டு மாதத்தில் இறைவாக்கினர் ஆகாயின் இறைவாக்குப் பணி தொடங்கியது. 'தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது' என்று ஆகாய் நூல் கூறுகிறது. ஆகாய் ஒரு குருவாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் அவர் குருவாக இருந்தாரா என்பதற்கான தெளிவான ஆதாரம் எதுவும் விவிலியத்தில் காணப்படவில்லை. இறைவாக்கினர் செக்கரியாவைப் போன்றே, எருசலேம் கோவில் மீண்டும் எழுப்பப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி இறைவாக்கினர் ஆகாய் எதுவும் பேசவில்லை. எருசலேம் கோவிலைக் கட்டியெழுப்புமாறு மக்களைத் தூண்டுவதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. "கோவிலைக் கட்டி முடியுங்கள்; இப்போது நாட்டில் நிலவும் வறுமைக்குக் காரணம் கோவில் இல்லாமையே. கோவில் கட்டப்பட்டுவிட்டால், யாவே இறைவன் நல்ல மழையைக் கொடுத்து, நாட்டை வளமுடைய நாடாக மாற்றுவார்” என்பது ஆகாயின் அசைக்க முடியா கருத்து.

ஆதாரங்கள்
  •  ஆகாய் 1:1
  •  எஸ்ரா 6:14 இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்காரியும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர் ணாாலலை<மேமேைரயைர தய தயஒ யபல யலெஎ. ஊடிஅடி அந பரளவய நட ிநேந
  •  ஆகாய் 1:8 "என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்" என்று சொல்கிறார் ஆண்டவர்.
  •  ஆகாய் 2:19 "விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்துவிடுமோ? திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ? இன்று முதல் உங்களுக்கு நான் ஆசி வழங்குவேன்."

அபக்கூக்கு

 அபக்கூக்கு (Habakkuk, /həˈbækək/ (கேட்கⓘ) or /ˈhæbəkʊk/ (கேட்கⓘ); எபிரேயம்: חֲבַקּוּק‎; also spelled Habacuc), என்பவர் எபிரேய விவிலியம் குறிப்படும் இறைவாக்கினராவார். இவர் அபக்கூக்கு நூலின் ஆசிரியரும், பனிரெண்டு சிறிய இறைவாக்கினர்களில் எட்டாவது இறைவாக்கினரும் ஆவார்.

அபக்கூக்கு
Habakkuk
அபக்கூக்குவின் உருசிய வடிவிவ உருவம்
அபக்கூக்குவின் 18ம் நூற்றாண்டு உருசிய வடிவிவ உருவம்
இறைவாக்கினர்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்டொய்சேர்க்கன், ஈரான்
கடரிம், இசுரேல்
திருவிழாசனவரி 15 (உரோமன், கிரேக்கு)
திசம்பர் 2 (மரபுவழி)
சித்தரிக்கப்படும் வகைஇறைவாக்கினர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அபக்கூக்கு (நூல்)

மீக்கா (Micah)

 மீக்கா (Micah), "கடவுளைப் போன்றவர் யார்?", என்ற அர்த்தமுடைய பெயரை உடைய இவர் ஏறக்குறைய கி.மு 737–696 காலப்பகுதியில் யூதவில் இறைவாக்குரைத்தவரும், மீகா நூலின் ஆசிரியரும் ஆவார். இவர் ஏசாயா, ஆமோஸ், ஒசேயா ஆகிய இறைவாக்கினர்களின் சமகாலத்தவரும், பனிரெண்டு சிறிய இறைவாக்கினர்களில் ஒருவரும் ஆவார். தென்மேற்கு யூதாவிலுள்ள மெரேசேத் எனும் இடத்தில் இவர் பிறந்தார்.

மீக்கா
இறைவாக்கினர் மீக்காவின் உரசிய உருவப் படம்
இறைவாக்கினர், எச்சரிப்பவர்
பிறப்புமெரேசேத்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம் (ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை, கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழிச் சபை)
திருவிழாசூலை 31

யோனா

 யோனா (Jonah / Jonas எபிரேயம்: יוֹנָה, தற்கால Yona திபேரியம் Yônā ; dove; அரபு மொழி: يونس‎ Yūnus, Yūnis / يونان Yūnān ; கிரேக்கம்/இலத்தீன்: Ionas) எனப்படுபவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த தென் இசுரவேல் அரசின் இறைவாக்கினர் என எபிரேய விவிலியம் குறிப்பிடுகின்றது. யோனா நூலில் இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதில் இவர் மீனால் அல்லது திமிங்கிலத்தினால் விழுங்கப்பட்டது முக்கிய நிகழ்வாகும். யோனா பற்றிய விவிலியக் கதை சிறு வேறுபாடுகளுடன் குரானில் திரும்பவும் எழுதப்பட்டுள்ளது.

யோனா
மைக்கல் ஆஞ்சலோவின் யோனா ஓவியம்
இறைவாக்கினர்
பிறப்புகி.மு 8ம் நூற்றாண்டு
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்இறைவாக்கினர் யோனாவின் கல்லறை, ஈராக்
திருவிழாசெப்டம்பர் 21 - கத்தோலிக்கம்